விமர்சனம்

ராக்கி தி ரிவெஞ்ச் (பட விமர்சனம்)

படம்: ராக்கி தி ரிவென்ஞ்
நடிப்பு: ஸ்ரீகாந்த், இஷான்யா, நாசர், பிரமானந்தம், ஷயாஜி ஷிண்டே, ஓஏகேசுந்தர், கராத்தே ராஜா, ரமேஷ்.டி இவர்களுடன் இரண்டு வேட்டை நாய்கள்
தயாரிப்பு: பிஎம்பி புரொடக்‌ஷன்
இசை: பப்பி லஹரி மற்றும் சரண் அர்ஜுன்
ஒளிப்பதிவு: அஜ்மல்கான்
இயக்கம்: கே.பி.பொகாடியா

தன்னை வளர்த்த முதலாளிக்கு விசுவாசமாக இருந்து அவரை கொன்ற வரை பழிவாங்கும் வேட்டை நாயின் கதை.
ஸ்ரீகாந்த் ஒரு போலீஸ் அதிகாரி. ரோட்டில் அடிபட்டு கிடக்கும் நாய்க் குட்டியை காப்பாற்றி அவரே வளர்ப்பதுடன் அதற்கு பயிற்சி கொடுத்து போலீஸ் துறையிலும் சேர்த்துக்கொள்கிறார். அந்த ஊர் எம்எல்ஏ ஷாயாஜி ஷிண்டே ஆயுத கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருக்கிறார். அதை கண்டறியும் ஸ்ரீகாந்த், ஆயுதம் கடத்துப வரையும். ஷாயாஜியை யும் கைதுசெய்து சிறையில் அடைக்கிறார். கோபம் அடைந்த ஷாயாஜி, தந்திரமாக ஸ்ரீகாந்த்தை சுட்டுக் கொல்கிறார். கண் எதிரிலேயே தனது எஜமான் (ஸ்ரீகாந்த்) சுட்டுத் தள்ளப்படுவதை காணும் ராக்கி (நாய்) எதிரிகளை எப்படி பழிவாங்குகிறது என்பதை த்ரிலாக சொல்கிறது கிளைமாக்ஸ்.

ரொம்ப நாட்களுக்கு பிறகு ஸ்ரீகாந்த்தை திரையில் பார்த்தாலும் இன்னும் இளமை பொலிவுடன் இருக்கிறார். கடமை தவறாத போலீசாக நடித்து வேடத்துக்கு கெத்து சேர்க்கிறார். 
சிறையில் இருக்கும் தனது அடியாளை ரிலீஸ் செய்யும்படி எச்சரிக்கை விடும் ஷாயாஜி ஷிண்டே விடம் முறைப்பு காட்டும் ஸ்ரீகாந்த் அவரையும் சேர்த்தும் சிறைக்குள் தள்ளுவது சபாஷ் போட வைக்கிறது.
வீட்டில் மனைவியிடம் செல்லம் கொஞ்சும்போதும் போலீஸ் வேலையை விட்டுவிட்டு உன்னுடனே இருந்துவிடுகிறேன் என்று பாசத்தை வெளிப் படுத்தும்போதும் ஸ்ரீகாந்த், ஏதோ விபரீதத்தை சந்திக்கப்போகிறார் என்று உணர முடிகிறது. எதிர்பார்த்தபடி அவர் கொல்லப் பட்டதும் ஒட்டுமொத்த கதையும் நாய் ராக்கியை சுழலத் தொடங்கிவிடுகிறது. 
ஸ்ரீகாந்த்தை சுட்ட ஷாயாஜி, கராத்தே ராஜாவை பார்க்கும்போது ராக்கியின் கண்களில் கோபம் கொப்பளிக்கிறது. தாவி குதித்து வந்து அவர்களை குதறும்போது புலியாகவே மாறியிருக்கிறது. இடைவேலைக்கு பிறகு ராக்கி யின் சகோதர நாயும் சேர்ந்து கொள்வது போனஸ்.
ஜெய்சங்கர் காலத்து கதையாக இருந்தாலும் இதுபோன்ற ஆக்‌ஷன் படங் களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். 
அமிதாப்பச்சன்போன்ற பெரிய டாப் ஹீரோக்களை வைத்து இந்தியில் ஹிட் படங்களை தந்திருக்கும் சீனியர் டைரக்டர் கே.சி.பொகாடியா முதன் முறையாக தமிழில் இயக்கியிருக்கும் இப்படம் எந்தவித ஆபாசத்துக்கும் இடமில்லாமல் கிளீன் ஆக்‌ஷன் கதையாகவும், நாயின் சாகசத்துடன் கூடியதாகவும் அமைந்திருப்பது பாராட்டத்தக்கது. 
குழந்தைகளுக்கான படங்கள் குறைந்து வரும் நிலையில் இதுபோன்ற படங்கள் குடும்பத்துடன் குழந்தைகளையும் தியேட்டருக்கு அழைத்து வரும். 
ராக்கி தி ரிவென்ஞ்- நாயின் சாகசங்களுடன் ஒரு ஆக்‌ஷன் படம்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close