Fully Entertainment

ராகுல்காந்திக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை..

புதுடெல்லி: பிரதமர் மோடியை விமரிசித்த வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப் பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட், ராகுலுக்கு  எச்சரிக்கை விடுத்து முடித்து வைத்தது.

ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர் பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் பிரதமர் மோடியை, ‘திருடன்’ என கூறியதாக ராகுல் காந்தி பேசியிருந்தார். இதையடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து ராகுல் கோர்ட்டில்  ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார், அதை ஏற்று அவர் மீதான வழக்கை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம், ராகுலுக்கு ஒரு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு குறித்து எதிர்காலத்தில் பேசும் போது, ராகுல் காந்தி எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுரை வழங்கியது.
#Sc Deliver Verdict On Contempt Plea Against Rahul Gandhi …