Fully Entertainment

ரபேல் போர் விமான ஒப்பந்தம் செல்லும்

புதுடெல்லி நவ: ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் எதுவும் நடக்கவில்லை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
ரபேல் விமானங்களை பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்ய பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. 36 ரபேல் போர் வினங்கள் வாங ரூ.58,000 கோடியில் இந்த ஒப்பந்தம் நடந்தது. இதில் பிரதமா் நரேந்திர மோடியின் தலையீடு இருந்ததுடன், முறைகேடு நடைபெற்ற தாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. இதை மத்திய அரசு மறுத்தது.

இதியடுத்து ரபேல் ஒப்பந்தம் தொடா்பாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனா். வழக்குரை ஞா்கள் எம்.எல்.சா்மா, வினீத் தண்டா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், முன்னாள் மத்திய அமைச்சா் யஷ்வந்த் சின்ஹா இந்த வழக்கு களை தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ரபேல் ஒப்பந்தத் தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என தீா்ப்பளித்தது.
தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, முன்னாள் மத்திய அமைச்சா்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் சவுரி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், வழக்கறுஞர் வினீத் தண்டா, ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் உச்சநீதி மன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனா். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கௌல், கே.எம்.ஜோசப் ஆகிய 3 நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் இதனை விசாரித்து வந்தது. விசாரணை முற்றிலுமாக முடிவடைந்த நிலையில், இன்று (நவ 14) தீர்ப்பு வழங்கப்பட்டது. ரஃபேல் ஒப்பந்தம் செல்லும் என நீதிபதிகள் உறுதி செய்தனர். மேலும், ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடக்கவில்லை என்பதற்கு எதிராக தொடரப் பட்ட மறு ஆய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

#SC dismisses all review pleas in fighter jets deal case

#Rafale deal verdict :SC Order