அரசியல்

ரஜினிகாந்த் அரசியல் வேற என் அரசியல் வேற

கமல் அதிரடி பேட்டி

ரஜினிகாந்த் அரசியல்  வேற என் அரசியல் வேற  என்றார் கமல்.

இதுபற்றி கமல்ஹாசன் கூறியது:
ரஜினிகாந்த் அரசியல் கொள்கை என்ன என்று என்பது இதுவரை எனக்கு தெரியவில்லை. எனக்கு எந்த மதமும் கிடையாது. எல்லா மதங்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. ரஜினியின் ஆன்மிக அரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லை. சினிமாவிலும் எனக்கும் ரஜினிக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. அவர் நடித்த படங்களில் எனக்கு உடன்பாடு கிடையாது. அத்தகைய பட வாய்ப்புகளை நான் ஏற்பது இல்லை. அதுபோல நான் நடித்தது போன்ற படங்களை அவர் ஏற்பது இல்லை. அதே மாதிரியான நிலைப்பாடு தான் அரசியலிலும் எங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ளது. அரசியலில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டு.  அதற்காக அவரை நான் கண்டிக்கிறேன் என்று அர்த்தம் அல்ல.
இருவரும் இணைந்து செயல்படுவீர்கள என்கின்றனர். தேர்தல் இன்னும் வரவில்லை. வந்த பிறகு அது பற்றி பார்த்துக் கொள்ளலாம். திரை உலகில் நானும் ரஜினியும் போட்டியாளர்களாகத் திகழ்ந்தோம். என்றாலும் எங்களுக்குள் நல்ல நட்பு நிலவியது. ஆனால் அரசியலில் அதை எதிர்ப்பார்க்க முடியாது. அரசியலில் விமர்சனம் செய்யும்போது, அது எங்களை முழுமையாக பிளவுபடுத்தி விடும். அது தவிர்க்க முடியாதது. ரஜினியின் அரசியல் பற்றி என்னால் இப்போது எந்த கருத்தும் சொல்ல இயலாது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. அரசியலில் நாகரீகமான போக்கை கடைபிடிக்க விரும்புகிறோம்.இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close