அரசியல்

மோடி வெறுப்பு அரசியலை அன்புகாட்டி கட்டுப்படுத்துவேன்

ராகுல் காந்தி தாக்கு

திருவனந்தபுரம் ஜூன்: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு என் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். ஆனால் வயநாடு தொகுதியில், 4 லட்சத்து 31 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கேரள மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் ராகுல் காந்தி நேற்று முதல் 3 நாட்கள் கேரளாவில் தங்கியிருந்து பல்வேறு கூட்டங்களில் பேசுகிறார். இரண்டாம் நாளான இன்று வாக்காளர்களுக்கு கூட்டத்தில் கலந்துகொண்டு ராகுல் காந்தி பேசியதாவது:
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ‘காவலாளி ஒரு திருடன்’ என்ற முழக்கத்தை மீண்டும் இப்போதுதான் கேட்கிறேன். நரேந்திர மோடி வெறுப்பு அரசியல் மூலம் நாட்டினை பிளவுபடுத்தி வருகிறார். ஆனால், காங்கிரஸ் கட்சி தனது அன்பால் அத்தகைய வெறுப்பு அரசியலை கட்டுப்படுத்தும். வயநாட்டின் மக்களுக்காக காங்கிரசின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்
இவ்வவாறு ராகுல்காந்தி பேசினார். :

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close