விமர்சனம்

மெஹந்தி சர்க்கஸ் (பட விமர்சனம்)

படம்:மெஹந்தி சர்க்கஸ்
நடிப்பு: மாதம்பட்டி ரங்கராஜ், சுவேதா திரிபாதி, மாரிமுத்த
தயாரிப்பு: ஞானவேல்ராஜா
ஒளிப்பதிவு: எஸ்.கே.செல்வகுமார்
இசை: ஷான் ரோல்டன்
இயக்குனர் சரவண ராஜேந்திரன்

நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் கொடைக்கானலில் கேசட் கடை வைத்தி ருக்கிறார். இவரது தந்தை  மாரிமுத்து ஜாதி வெறிபிடித்தவர். இளவட்ட வயதுகொண்ட ரங்கராஜ், காதலர்கள் மத்தியில் பேசப்படுபவர். இளையராஜா பாடல்களை சுழலவிட்டு ஊர் இளசுகளின் காதலுக்கு உதவுகிறார். அந்த ஊருக்கு ராஜஸ்தானில் இருந்து சர்க்கஸ் குழு வருகிறது. அந்த சர்க்கஸில் வடநாட்டு அழகு பதுமை சுவாதி திரிபாதியின் சாகசம் பிரபலமாக பேசப்படுகிறது. சர்க்கஸில் கத்தி வீசும் ஆபத்தான விளையாட்டில் உயிரை பணயம் வைத்து கத்தியை எதிர்கொண்டு நிற்கிறார். சுவாதி மீது ரங்கராஜுக்கு காதல் பிறக்கிறது. அவரை திருமணம் செய்ய விரும்புகிறார். இந்த விஷயத்தை சுவாதியின் தந்தையான சர்க்கஸ் முதலாளியிடம் தெரிவிக்கிறார். அதற்கு அவர் ஒரு நிபந்தனை போடுகிறார். அந்த கண்டிஷனை நிறைவேற்ற ரங்கராஜே கத்தி வீசக்கற்றுக்கொள்கிறான். இந்த காதலுக்கு ரங்கராஜின் தந்தை மாரிமுத்து எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதற்கிடையில் சுவாதியும் ரங்கராஜை காதலிக்கிறார். இவர்களது காதல் வெற்றிபெற்றதா என்பதை திரையில் காணலாம்.

நண்பர்களுடன் ஊர்சுற்றும் ஹீரோ ரங்கராஜ் இளவட்ட நாயகனாகவும், காதல் தோல்வி அடைந்தபின் பாட்டிலும் கையுமாக தேவதாஸ்போல் உருக்கமான நடிப்பை வெளியிட்டிருக் கிறார். காதலிக்காக கத்தி வீச கற்றுக் கொள்ளும் காட்சியும் கிளைமாக்ஸில் காதலி மீது கத்தி வீச துணியும் போதும் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு வரவழைக்கிறார்.

சர்க்கஸ் நாயகி சுவாதியிடம் அழகு பொங்கி வழிகிறது. வயதான பிறகும் தனது காதலனை எண்ணி நோயில் விழும் சுவாதியின் நடிப்பு மனதில் பதிகிறது. மாரிமுத்து ஜாதி வெறிபிடித்த வராக வருகிறார். பாதிரியார் வேலராமமூர்த்தி வேடத்துக்கு பொருத்தம்.

 நண்பர்போல் பழகி காதலுக்கு உதவும் அந்த கத்தி வீசும் நபர் நண்பராக பழகி அவர்களது காதலுக்கு வேட்டு வைப்பது காட்சிக்கு விறுவிறுப்பு சேர்க்கிறது.

70, 80களின் காதல் கதையாக இப்படத்தை சித்தரிக்கும் இயக்குனர் சரவண ராஜேந்திரன் ஒரு அனுபவ பாடமாகவே காட்சிகளை வரிசைப்படுத்தியிருக்கிறார். ஜோக்கர் பட இயக்குனர் ராஜு முருகன் கதை அமைத்திருக்கிறார். படம் முழுக்க இளையராஜாவின் பாடல்கள் ஒரு அங்கமாகவே நகர்கிறது. அவரது பாடலை காதலர்களின் இணைப்பு பாலமாக பயன்படுத்தியிருப்பதும் ரசனை. ஷான் ரோல்டனின் இசை இளையராஜாயின் இசை கடலில் சங்கமமாமகிறது. எஸ்.கே.செல்வகுமாரின் ஒளிப்பதிவில் 80களின் காலகட்டம் கண்முன் நிற்கிறது.

மெஹந்தி சர்க்கஸ்- காதலின் தீபம்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close