அரசியல்

மு.க..ஸ்டாலின்- தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு

3வது அணி அமையுமா?

 

சென்னை: தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் அல்லாத கூட்டாட்சி முன்னணி (பெடரல் பிரண்ட்) என்னும் 3-வது அணியை தேசிய அளவில் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக அவர் ஏற்கனவே, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, மதசார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவே கவுடா ஆகியோரை சந்தித்து பேசி ஆதரவு திரட்டினார். இந்தநிலையில் தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வின் ஆதரவை பெறுவதற்காக இன்று (ஏப் 29) சென்னை வந்தார். அவர் முதலில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். பின்னர் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சுமார் 2 மணிநேரத்துக்கும்மேல் ஆலோசனை நடத்தினார். பிறகு இருவரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். 
தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது:,தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். பிறகு என் வீட்டிற்கு வந்து, மதிய உணவு சாப்பிட்டார். பின்னர் அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. அரசியல் சூழ்நிலை, எதிர்காலத்தில் அரசியல் அமைவது தொடர்பாக நீண்ட நேரம் என்னிடம் விவாதித்தார். முக்கியமாக மதசார்பின்மையை காப்பாற்றுவது, மாநிலத்திற்கு கூடுதல் உரிமையை பெறுவது, சுயாட்சி உரிமையை பெறுவது, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது. மாநிலங்களுக்கு நிதி பங்கீட்டு உரிமையை பெறுவது, மத்திய அரசின் சர்வாதிகார போக்கு குறித்து ஆலோசித்தோம். ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. முதல்கட்டமாக பேச்சுவார்த்தை தொடங்கினாலும், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும். அவரும் (சந்திரசேகர ராவ்) பிற மாநில முதல்-மந்திரிகள், அரசியல் தலைவர்களிடம் பேசிவருகிறார். நாங்களும் எங்களுடன் ஒத்த கருத்துடைய கருத்துக்கள் கொண்ட கட்சிகள் உள்ளவர்களிடமும் ஆலோசிக்க வேண்டும் என்றோம். திமுக பொதுக்குழு, நிர்வாக குழு, உயர்மட்ட குழுவில் ஆலோசிக்க வேண்டும். தொடர்ந்து பேசுவேன் என்று கூறிஉள்ளேன். ஆரோக்கியமான முறையில் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது மகிழ்ச்சியளிக்கிறது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
பிறகு சந்திரசேகர ராவ் கூறும்போது.*திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றேன். பிறகு ஸ்டாலினுடன் நடந்த சந்திப்பு நல்லமூறையில் அமைந்தது. இது 3வதுஅணியோ. 4வது அணியோ அமைப்பதற்கான சந்திப்பு இல்லை. மதச்சார்பற்ற நாடாக இந்தியா இருக்க வேண்டும், மாநிலங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து அதிக நிதி பெறுவது எப்படி. கல்வியை மாநில் பட்டியலுக்கு கொண்டுவர்வது குறித்தும். பொதுவான் அரசியல் நிலவர்ம் குறித்து பேசினோம்./ இநத சந்திப்பு இறுதியானது இல்லை/*என்றார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close