Fully Entertainment

மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் (பட விமர்சனம்)

படம்: மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்
நடிப்பு: ஆரவ், காவ்யா தபர், நிகிஷா பட்டேல்.. சாயாஜி ஷிண்டே, நாசர், ராதிகா , ரோகிணி, பிரதீப் ராவத், ஹரீஷ் பெரடி. ஆதித்யா, சாம்ஸ், விஹான்
தயாரிப்பு : எஸ்.மோகன்.
இசை: சைமன் கே.கிங்
ஒளிப்பதிவு: கே.வி.குகன்
இயக்குனர்: சரண்
ரவுடித்தனம் செய்து வசூல் வேட்டையில் ஈடுபடும் ஆரவ். போலீசை கடத்தி வைத்துக்கொண்டு மந்திரியிடமே பேரம் பேசுகிறார். அவருக்கு காட்பாதராக இருக்கிறார் சாயாஜி ஷிண்டே. கோடிகணக்கான பண்த்தை ஆரவிடம் கொடுத்துவிட்டு வெளிநாடுசென்றுவிட்டு வந்து வாங்கிக் கொள்வதாக சொல்லி புறப்பட்டு செல்கிறார் சாயாஜி. இதற்கிடையில் ஆர்வ் மீது காதல் கொள்கிறார். காவ்யா தாபர். காவ்யாவை பயந்த சுபாவம் கொண்ட மாணவர் விஹான் காதலிக்கிறார். இந்நிலையில் ஆரவை தீர்த்துக்கட்ட போலீஸ் திட்டமிடுகிறது. தனியாக கல்லறைக்கு வரும் ஆரவை மறைந்திருந்து என்கவுண்டர் செய்கிறார் பிர்தீப் ராவத். அந்த நேரத்தில் அங்கு குறுக்கிடும் விஹான் துப்பாக்கி குண்டுக்கு பலியாகிறார். ஆனால் அவரது ஆவி ஆரவ் உடம்பில் புகுந்து கொள்கிறது. தைரியமாக இருந்த ஆரவ் பந்தாங்கொள்ளி ஆகிவிடுகிறார். அவரது உடம்பிலிருந்துஆவியை ஓட்ட பல முயற்சி நடக் கிறது. அதன் பிறகு நடப்பது என்ன என்பதை காமெடியாக விளக்குகிறது கிளைமாக்ஸ்.
கோழையான ஒருவனின் உடம்பில் ஆவி புகுந்து கொண்டு அட்டகாசம் செய்யும் கதையிலிருந்து இந்த கதையை அப்படியே உல்லட்டாவாக திருப்பிபோட்டிருக் கிறார் இயக்குனர் சரண். தைரியமான ஒருவனின் உடம்பில் பயந்தாங் கொள்ளி ஆவி புகுந்து கொண்டால் என்னவெல் லாம் நடக்கும் என்பதை காமெடியாக சொல்லியிருக்கிறார்.
ரவுடித்தனம் செய்யும் தாதாவாக ஆரவ் நடித்திருக் கிறார். யாராக இருந்தாலும் அடித்து துவம்சம் செய்யும் ஆரவ் போலீசாரை கடத்தி வைத்துக் கொண்டு மந்திரியிடம் பேரம் பேசுவதும் சாயாஜி ஷிண்டெவுக்கு அடியாள் வேலை செய்வதுமாக அசல்ட்டாக நடித்துவிட்டு செல்கிறார் . தாதா பாடலுக்கு வசன பாணியில் பாடல் பாடி ஸ்டையிலாக நடனம் ஆடுவதும் ரசிக்கத்தக்கது.
தன்னை பின்தொடர்ந்து வந்து காதலிக்கும் காவ்யாவை விரட்டி அடிப்பதும் கல்லூரி டீன் நாசரிடம் தெனாவட்டாக பேசுவதுமாக கெத்து காட்டுகிறார். பயந்தாங்கொள்ளி பேய் ஆரவ் உடலுக்குள் புகுந்தவுடன் ஆக்‌ஷன் காட்சிகளை ரொம்பவே மிஸ் செய்ய வேண்டியிருக்கிறது.
ரோகிணியிடம் சென்று வந்திருப்பது உன் மகந்தான் என்பதை நிரூபிக்க படாதபாடு படுகிறார். எல்லாம் சரி ஆனால் திடீரென்று எம்பிபிஎஸ் மாணவராக கல்லூரிக்கு சென்று படிப்பதெல்லாம் நம்பமுடியாத காட்சிகள். ஒவ்வொரு மாணவருக்கும் ஐடி கார்டு இருக்கிறது. சக மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஆரவை எப்படி ஏற்றுக்கொள்கிறர்கள் என்பதற்கு விளக்கம் இல்லை. மேலும் கல்லூரி டீன் நாசர் ஒரு புது மாணவரை அதுவும் தனக்கு மிரட்டல் விட்ட ரவுடியை எப்படி ஏற்றுக்கொள் கிறார் என்பதும் புரியாத புதிர்.
கிளைமாக்ஸில் பயந்தாங்கொள்ளி ஆவி உடலிருந்துபோனபிறகு தன்னை அழிக்க வந்த அகோரியை அதரிடியாக தாக்கி நிமிர வைக்கிறார் ஆரவ்.
ஆரவின் தாயாக வரும் ராதிகா, தன்னுடைய அப்பா எம்.ஆர்.ராதா ஸ்டைலில் நடித்திருக்கிறார். பாவணைகள் சரியாக இருந்தாலும் ராதாவை போலவே குரலையும் மாற்றி ஏற்ற இறக்கத்துடன் பேசியிருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம். ஆரவிடம் காதலுக்கு சிபாரிசு செய்யப்போய் செமத்தையாக அடி வாங்குவது சிரிப்பு.

ஆதித்யா, சாம்ஸ், முனிஸ்காந்த், திவ்யதர்ஷினி காமெடி செய்யும்போது சில சமயம் ஆரவும் காமெடி செய்கிறார். நிகிஷா பட்டேல் கவர்ச்சிகு பயன்பட்டிருக்கிறார்.
கே.வி.குகன் ஒளிப்பதிவு ஒகே. அதுபோல் இசை அமைப்பாளர் சைமன் கே.கிங்கும் ரொம்பவே கைகொடுத்திருக்கிறார். தா தா பாடல் வித்தியாசமான கானா.ம்

இயக்குனர் சரண் ரொம்பா நாளைக்கு பிறகு ஒரு காமெடி படத்துடன் வந்திருக்கிறார். லாஜிக் மேஜிக் பார்க்காமலிருந்தால்  டென்ஷன் இல்லாமல் சிரித்திவிட்டு வரலாம்.

 
‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ ஆக்‌ஷன் காமெடி ராஜா.