விமர்சனம்

மான்ஸ்டர் (பட விமர்சனம்)

படம்: மான்ஸ்டர்
நடிப்பு: எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன், இவர்களுடன்  எலி.
தயாரிப்பு: எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.ஸ்ரீதர்
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு: கோகுல் பினாய்
இயக்கம்: நெல்சன்வெங்கடேசன்

வாடகை வீட்டிலிருக்கும் எஸ்.ஜே.சூர்யா திருமணம் செய்ய பெண் பார்க்கிறார். பெண் வீட்டார் சொந்த வீடு இருக்கா என்று விசாரிக்கின்றனர். நொந்து போன சூர்யா சொந்தமாக வீடு வாங்கு கிறார். வீடு வாங்கிய நேரம் பிரியா பவானி  திருமணத்துக்கு சம்மதிக்கிறார். அவர் ஆசைப் பட்டதுபோல் விலை உயர்ந்த ஷோபா அலங்கார பொருட்கள் வாங்கி வீட்டில் வைக்கிறார். இவையெல்லாவற்றையும் கடித்து குதறி பாழாக்குகிறது சிறிய எலி. அதை அடித்து துரத்த முயலும்போதெல்லாம் தப்பித்து ஓடுகிறது. தொல்லை தாங்காமல் எலியை விரட்ட ஒரு குழுவை வரவழைக்கிறார். படாதபாடுபட்டும் அவர்களால் எலியை பிடிக்க முடியவில்லை. இந்த குழுவில் வில்லனும் இருக்கிறான். தனது 30 லட்சம் மதிப்புள்ள வைரத்தை எலி விழுங்கிவிட்டதால் அதை பிடிப்பதில் குறியாக இருக்கிறான். சந்தோஷமாக தொடங்க வேண்டிய எஸ்.ஜே.சூர்யாவின் வாழ்க்கை எலி தொல்லையால் சோகமாகிக்கொண்டே போகிறது. முடிவில் அந்த எலிக்கு எப்படி முடிவுகட்டுகிறார் என்பதை சென்டிமென்ட் டச்சுடன் சொல்கிறது கிளைமாக்ஸ்.
ஸ்பைடர் உள்ளிட்ட ஒன்றிரண்டு படங்களில் வில்லனாக மாறிக்கொண்டிருந்த எஸ்.ஜே.சூர்யா ரூட்டை மாற்றி காமெடி கதைக்குள் அடியெடுத்து வைத்து அதில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். வழக்கமான அலட்டல், அநாயிச பேச்சு எதுவும் இல்லாமல் அமைதியான பேச்சு, உயிர்கள் மீது அன்பு காட்டும் பண்பு என்று நெஞ்சை வருடுகிறார். தொடக்க காட்சிகளில் வீட்டில் தனியாக இருக்கு ம்போது கேட்கும் விதவிதமான சத்தத்ததால் பேய் இருக்குமோ என்று பயந்து அலறியபடி ஓட்டம்பிடிப்பது குபீர். 
எலியை பிடிக்க எலி கூண்டுகளாக வாங்கி வந்து அடுக்கினாலும் அதில் உள்ள தேங்காயை டெக்னிக்காக எலி கவ்விக்கொண்டு செல்வதும், தன்னை அடிக்க வரும் சூர்யாவை சந்து பொந்துக்களில் புகுந்துகொண்டு ஆட்டம் காட்டுவதுமாக குழந்தைகளை கைகொட்டி சிரிக்க வைத்திருக்கிறார்கள். சூர்யாவுடன் சேர்ந்து கருணாகரனும் சிரிக்க வைக்கிறார்.
பிரியா பவானி சங்கர் அலட்டலே இல்லாமல் ஏற்கனவே எஸ் ஜே.சூர்யா ஒரு விழாவில் குறிப்பிட்டதுபோல் குடும்ப குத்து விளக்காக வந்துபோகிறார்.
எலியை காட்டும் கேமரா புலியை காட்டும் அளவுக்கு பயமுறுத்துவது கொஞ்சம் ஓவர்தான்.
எலி தொல்லையை அனுபவித்த ஒவ்வொருவரும் படத்தில் வரும் காட்சிகளை பார்க்கும்போது இதேபோல்தான் எங்க வீட்டிலும் எலி அட்டகாசம் செய்தது என்று முணுமுணுக்கின்றனர். 
‘மான்ஸ்டர்’ எலியின் அட்டகாசம்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close