விமர்சனம்

மயூரன் (பட விமர்சனம்)

படம்: மயூரன்

நடிப்பு: அஞ்சன் தேவ், அஸ்மிதா, வேல ராமமூர்த்தி அமுதவாணன், கைலாஷ், சாஷி, பாலாஜிராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை

தயாரிப்பு:கே.அசோக்குமார், பி.ராமன், ஜி.சந்திரசேகரன், எம்.பி.கார்த்திக்

இசை: ஜுபின் ஜெரார்ட்

ஒளிப்பதிவு: பரமேஷ்வர்

இயக்குனர் நந்தன் சுப்புராயன்

கல்லூரியில் படிக்கும் அஞ்சனை அவரது மாமா வளர்க்கிறார். இடதுசாரி சிந்தனையுடன் வளரும் அஞ்சனுக்கு கல்லூரியில் அமுதவாணன் பாலாஜி ராதாகிருஷ்ணன் நண்பர்களாகிறார்கள். இதற்கிடையில் ஹீரோயின் அஸ்மிதா மீது காதல் கொள்கிறார் அஞ்சன். முதலில் காதலை ஏற்க மறுக்கும் அஸ்மிதா ஒரு கட்டத்தில் காதலை ஏற்கிறார். இருவருக்கும் குடும்பத்தினர் திருமண ஏற்பாடு செய்கின்றனர். இதற்கிடையில் போதை கும்பலுடன் அஞ்சனுக்கு மோதல் ஏற்படுகிறது. கல்லூரி நடத்தும் பெரும் புள்ளி வேல ராமமூர்த்தி ரவுடிகள் துணையுடன் போதை மருந்து கடத்தலை செய்கிறார். அவருக்கு உறுதுணையாக இருக்கும் ஆனந்த்சாமி எதற்கும் கவலைப்பாடல் கொலைகள் செய்கிறார். ஒருகட்டத்தில் அஞ்சனின் நண்பரை ஆனந்த்சாமி கொல்கிறார். எங்கு தேடியும் நண்பன் கிடைக்காத நிலையில் அவன் கொலை செய்யப்பட்டதையறிந்து கோபம் அடைகிறார் அஞ்சன். பழிக்குபழியாக ஆனந்த்சாமியை அஞ்சன் கொல்கிறார். ஆனந்தசாமி கொல்லப்பட்டதை அறிந்து கோபம் அடையும் வேல ராமமூர்த்தி அஞ்சனை கொல்ல முடிவு செய்கிறார். இறுதியில் நடப்பது என்ன என்பதற்கு த்ரிலாக பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

ஹீரோ அஞ்சன் அலட்டல் இல்லாமல் தனது கதாபாத்திரத்தை கையாண் டிருக்கிறார். நிதானமான செயல்பாடுகள் என்றாலும் பார்வையில் ஒரு வேகம் தெரிகிறது. ஹீரோயின் அஸ்மிதாவை கண்டு காதலில் உருகும்போது சிலையாகிறார். 
நடிப்பில் முதிர்ச்சியை காட்டியிருக்கும் அஸ்மிதா திரைப்பட ஹீரோயினுக்கான டெக்னிக்கை கையாளத் தெரியாமல் கோட்டைவிட்டிருக்கிறார். நெடு நெடு வில்லன் ஆனந்த்சாமி நினைவில் நிற்கிறார். பெரியவர் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் வேல ராமமூர்த்திக்கு கதையை தாங்கி நிற்கிறார். உட்கார்ந்த இடத்திலிருந்தே அடியாட்களை ஏவி காரியத்தை கச்சிதமாக முடிப்பதாகட்டும், மிரட்டல் குரலில் பேசி எதிரியை பணிய வைப்பதா கட்டும் அழுத்தமான நடிப்பால் அதிர வைக்கிறார். 
கிளைமாக்ஸில் அஞ்சனை கொல்வதற்காக தனது வீட்டிற்கே வரவழைத்து மணிக்கணக்கில் காத்திருக்க வைப்பது திடுதிடுக் நகர்வுகள். எதிர்பாராத அந்த கிளைமாக்ஸ் இயக்குனர் நந்தன் சுப்பராயனுக்கு சபாஷ் போட வைக்கிறது. பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நந்தன் தனது குருநாதர் பாணியிலேயே கிளைமாக்ஸை முடித்திருப்பது செம. ஜுபின் இசை, பரமேஷ்வர் ஒளிப்பதிவு ஓ.கே.

மயூரன்-தில்லானவன்

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close