Fully Entertainment

மகா. சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு

மும்பை நவ.  மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பானமை கிடைக்காத நிலையில் அவசர அவசரமாக பாரதிய ஜனதா கட்சி அஜீத்பவார் ஆதரவுடன் பதவி ஏற்றது. பட்நவிஸ் முதல்வரானார். அஜீத்பவார் துணை முதல்வர் ஆனார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பாஜ பெருபான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. பெரும்பான்மை இல்லாததால் பட்நவிஸ் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ். காங்கிரஸ் குறைந்த பட்ச செயல் திட்டம் தீட்டி மகாராஷ்டிர விகாஸ் முன்னணி என்ற புதிய அணி அமைத்து ஆட்சி அமைக்க கவர்னரிடம், முதல்வர் உத்தவ் தாக்ரே உரிமை கோரினார். அதை ஏற்று டிசம்பா் 3-ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் பகத்சிங் கோஷியாரி அறிவித்தார். \
மகாராஷ்டிரா சட்டப் பேரவையில் மொத்த எம்எல்ஏக்கள் 288. பாஜ 105 இடங்களில் வென்றது. சிவசேனை கட்சி 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸில் 44. .இந்நிலையில் இன்று பிற்பகலில் சட்டப்பேரவையில் முதல்வா் உத்தவ் தாக்கரே அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபித்தார். இன்று நடந்த வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு ஆதரவாக 169 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். பெரும்பான்மைக்கு
145 எம்எல்ஏக்களின் ஆதரவு போதும் என்ற நிலையில் தேவைப்பட்ட நிலையில் அதைவிட கூடுதலாக 169 எம்எல்ஏக்களின் ஆதரவோடு நம்பிகை தீர்மானம் வெற்றி பெற்றது.
பாஜக உள்ளிட்ட எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்துக்கு எதிராக ஒரு எம்எல்ஏவும் வாக்களிக்கவில்லை.
#Maharashtra floor test: Uddhav proves majority