Fully Entertainment

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்

புதுடெல்லி நவ: பா.ஜ, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராததால் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
சமீபத்தில் மகாராஷ்டிரவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பாஜக 105, சிவ சேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் வென்றது ஆட்சியமைக் கும் அளவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக கடந்த சில நாட் களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

தேர்தலுக்கு முன்பாக பா.ஜ. சிவசேனா கூட்டணி அமைத்திருந்தன. அதேபோல் தேசியவாத காங்கிரஸ். காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தன. தேர்தலுக்கு பிறகு வெற்றிபெற்ற இடங்களைப் பொறுத்து பா.ஜ,சிவசேனா இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்த்தநிலையில் இரண்டு கட்சி களும் முதல்வர் பதவி தங்களுக்குத்தான் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தன. இந்த மோதல் முற்றியதையடுத்து கூட்டணி பிளவுபட்டது.
தேசியவாத மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம் என்ற சிவசேனவின் கனவும், முயற்சிகளும் பலனளிக்கவில்லை. ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்ததால் இன்று அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தும் நிலைக்கு சென்றது. சட்டமன்ற பேரவையின் பதவிக் காலம் முடிந்துவிட்டதை யடுத்து மராட்டியத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல் படுத்த மத்திய அரசுக்கு கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பரீசிலிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்தார். அதன்படி மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது
#President Rule in Maharashtra