விமர்சனம்

மகாமுனி (பட விமர்சனம்)

படம்:மகாமுனி

நடிப்பு: ஆர்யா (இரட்டை வேடம்), மகிமா நம்பியார், இந்துஜா, இளவரசு, ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ், மதன்குமார், காளி வெங்கட், ஜிஎம்.சுந்தர், ரோணி, 
தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜா
இசை: எஸ்.எஸ்.தமன்
ஒளிப்பதிவு: அருள் பத்மநாதபன்
இயக்கம்: சாந்தகுமார்

சிறுவயதிலேயே தாயால் கைவிடப்படுகின்றனர் மகா, முனி (ஆர்யா இரட்டை வேடம்). ஒருவன் கொலைசெய்வதற்கு திட்டம்போட்டு தரும் ரவுடியாகவும். இன்னொருவன் டீயூஷன் சென்ட்ரலில் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பது, யோகாசனம் செய்யும் பிரமச்சாரியாகவும் மாறிவிடுகின்றனர். அரசியல்வாதி முத்துராஜ் (இளவரசு) சொற்படி ஆட்களை கொல்வதற்கு மகா திட்டம்போட்டு கொடுக்க அரசியல் பிரமுகர் ஒருவர் கொல்லப்படுகிறார். அந்த வழக்கு பெரிய விஷயமாகிவிட போலீஸ் முத்துராஜை வளைக்கிறது. அவர் மகாதான் கொலை செய்தான என்று மாட்டிவிட்டு எஸ்ஸாக பார்ப்பதுடன் போலீஸ் அதிகாரியுடன் கூட்டு சேர்ந்துகொண்டு மகாவையே கொல்ல திட்டமிடுகிறார். இந்த விஷயம் மகாவுக்கு தெரிந்துவிட அவன் தப்பிக்கிறான்.  இந்த விஷயம் எதுவும் தெரியாத அப்பாவி முனி வழக்கில் சிக்கிக்கொள்கிறான். அதன்பிறகு நடப்பது என்ன என்பதற்கு விளக்கம் அளிக்கிறது கிளைமாக்ஸ்.
இரட்டை வேடம் ஏற்றிருக்கும் ஆர்யாவிடம் தோற்றத்தில் பெரிய மாற்றம் காட்டாவிட்டாலும் நடிப்பில் ரொம்பே வித்தியாசம் காட்டியிருக்கிறார். குறிப்பாக முனி கதாபாத்திரம் தத்துவார்த்த மாக அமைக்கப்பட்டிருக்கிறது. கடவுள் யார் என்பதற்கு அவர் தரும் விளக்கத்தை முதன்முறை கேட்டால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்று சொல்ல முடியாது. அந்த வசனம் மட்டும் கமல் எழுதியிருப்பாரோ என்ற சந்தேகமும் வந்துவிடுகிறது. மகா கதாபாத்திரத்திற்குள் நிறைய அழுத்தம் புதைந்திருக்கிறது. இந்த வேடத்தை இன்னும் கொஞ்சம் வேகப்படுத்தியிருந்தால் கோபத்தின் வெளிப்பாடு பளீரென்று தெரிந்திருக்கும். கடைசி வரை இளவரசுவின் பேச்சை கேட்டு துப்பாக்கி குண்டுக்கு இலக்காகும்வரை அவருக்கு உண்மையானவராகவே இருப்பதும், கிளைமாக்ஸில் ஏண்ணே இப்படி செஞ்சீட்டீங்க என்று கேட்டபடி அவரை சுட்டுக்கொல்வதும் யதார்த்தம்.  

இரண்டு ஆர்யாவில் கடைசியில் உயிர் பிழைத்து வருவது மகாவா, முனியா என்பதிலும் சற்று குழப்பம் இருந்தாலும் இருவரும ஒன்றாகிவிட்டதுபோல் நான் மகாமுனி என்று ஆர்யா சொல்வது நிறைவு. 

பேண்ட்டை இழுத்துவிட்டுக்கொண்டு, தந்தைக்கு கொண்டு செல்லும் பாரின் சரக்கை வாங்கி குடித்துவிட்டு பாட்டிலை கீழேபோட்டு உடைத்துவிட்டு உடைஞ்ச கண்ணாடியெல்லாம் பொறிக்கிட்டுபோ என்று வேலையாளிடம் கோபப்படுவதுமாக தெறிக்கவிடுகிறார் மகிமா நம்பியார். முனி ஆர்யா மீது இருக்கும் ஒரு சாப்ட் கார்னர் திரைக்கதையில்திருப்பங்களை ஏற்படுத்துகிறது,

கணவர் ஆர்யா கொலைகாரர்களுக்கு உடந்தையாக இருக்கிறார் என்று தெரிந்தும் அவரையே நம்பி அவர் பின்னாலேயே வெள்ளந்தியாக சுற்றும் இந்துஜாவின் முடிவு பரிதாபம்.

தொடக்கம் முதல் இறுதிவரை இறுக்கமாக திரைக்கதை செல்கிறது. காமெடி இல்லாதது ஒருவகையில் பிளஸ் ஆகவும்அதுவே  மைனஸ் ஆகவும் இருக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் எல்லை மீறாமல் வந்துசெல்கின்றன.

சாந்தகுமாரின் வித்தியாசமான திரைக்கதை ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடுகிறது,

மகாமுனி-ஆர்யாவுக்கு கைகொடுக்கும்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close