விமர்சனம்

பூமராங் (பட விமர்சனம்)

படம்: பூமராங்
நடிப்பு: அதர்வா முரளி, மேகா ஆகாஷ், ஆர்.ஜே.பாலாஜி, இந்துஜா
தயாரிப்பு: ஆர்.கண்ணன்.
இசை: ரதன்
ஒளிப்பதிவு: பிரசன்னா எஸ் சுகுமார்
இயக்குனர்:ஆர்.கண்ணன்

மலை பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற ஒரு இளைஞருக்கு முகம் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட தனது முகத்தை கண்ணாடியில் பார்க்க முடியாமல் உடைந்து போகிறார். முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து புதிய முகத்தை பொருத்தலாம் என மருத்துவர் கூற, அதற்கு ஒப்புக்கொண்டு மூளை சாவடைந்த நிலையில் இருக்கும் அதர்வாவின் முகத்தை எடுத்து அவருக்கு பொருத்துகின்றனர். சிகிச்சை முடிந்து வெளியே வரும் அவரை கொல்ல ஒரு கூட்டம் துரத்துகிறது. தனக்கு பொருத்தப்பட்ட புதியமுகத்தால்தான் இந்த பிரச்னை என எண்ணும் அதர்வா, முகத்தின் சொந்தக்காரர் யார், அவர் சந்தித்த பிரச்னை என்ன என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் களமிறங்குகிறார். அதன் பின்னணியில் நடக்கும் சம்பவங்களை சுவாரஸ்யமாக கோர்த்து அத்துடன் நதி நீர் இணைப்பு பிரச்னையையும் பேசி புதுவித கலவையாக கிளைமாக்ஸ் முடிகிறது. 

மாறுபட்ட பாத்திரங்களுக்கு கனக்கச்சிதமாக பொருந்திவிடுகிறார் அதர்வா. முகமாற்று அறுவை சிகிச்சையை மையமாக கொண்ட மாறுபட்ட இக்கதையும் அவருக்கு ஏகபொருத்தம், துறுதுறு இளைஞனாக நடித்திருக்கிறார். காதல், நடனம் காட்சிகளில் திறமையை வெளிப்படுத்தியிருப்பதுடன் ஆக்‌ஷன் காட்சிகளில் கடுமையான உழைப்பை கொடுத்திருக்கிறார். கோபத்தில் பொங்கும் காட்சிகளில் ஆக்ரோஷம் அதிகமாக கொப்பளிக்கிறது. 
அழகான முகவெட்டுடன் வரும் மேகா ஆகாஷ் கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். தான் எடுக்கும் குறும்படத்துக்காக அழகான ஹீரோவை தேடும் அவர் அதர்வாவை நடிக்க அழைப்பதும், பின்னர் அவர் மீது காதல் கொள்வதும் சினிமா தனமாக இருந்தாலும் ஒரு இளைஞன் மீது ஒரு இளைஞி காதல் கொள்வது அசதாரண மான விஷயமல்லவே… 2வது கதகாநாயகியாக இந்துஜா வேடத்துக்கு உரம் சேர்த்திருக் கிறார். முதற்பாதியில் சதீஷும், பிற்பாதியில் ஆர்ஜே பாலாஜியும் கதை ஓட்டத்துக்கும் காமெடிக்கும் கைகொடுக்கின்றனர். ஆர்.ஜே.பாலாஜி அவ்வப்போது பேசும் அரசியல் வசனங்களில் குத்தல் தெறிக்கிறது. 
ெதலுங்கில் விஜயதேவரகொண்டா நடித்த அர்ஜூன் ரெட்டி படத்துக்கு இசை அமைத்த ரதன் இப்படம் மூலம் தமிழில் இசை அமைப்பாளராக அறிமுகமாகியிருக்கி றார். பாடல்கள் எல்லாமே ரசிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக நதிநீர் இணைப்புக் காக வெட்டும் கால்வாய் பாடல் காட்சி அசத்தல். தெலுங்கு சினிமாபோலவே தமிழ் சினிமாவும் ரதனை ரதத்தில் ஏற்றிக்கொள்ளும். 
பிரசன்னா எஸ்.சுகுமார் ஒளிப்பதிவு படத்துக்கு பிளஸ். கடுமையான உழைப்பு காட்சிக்கு காட்சி வெளிப்படுகிறது. 
பொதுவாக காதல் விவகாரங்களை கையாளும் இயக்குனர் ஆர்.கண்ணன் கடந்த முறை, ‘இவன் தந்திரன்’ படத்தில் டெக்னாலஜி பார்முளாவுடன் மாறுபட்ட கதைக் களத்தைகையாண்டு வெற்றி பெற்றார். இம்முறை, இதுவரை யாரும் தொட்டுப்பார்க் காத நதி நீர் இணைப்பு பிரச்னையை கையிலெடுத்து, நதிநீர் இணைத்தால் வறண்ட இடங்களிலும் விவசாயம் செழிக்கும் என்பதை அழுத்தமாக சொல்லியிருப்பதுடன் சரியான தீர்வையும் சொல்லியிருக்கிறார். 
நதிநீர் இணைப்பில் ஆர்வம் காட்டும் ரஜினியும் இப்படியொரு கதையை துணிச்சலாக எடுத்ததற்கு இயக்குனர் ஆர்.கண்ணனுக்கு பாராட்டு ெதரிவித்திருக்கிறார்.

‘பூமராங்’ திரும்ப சுடும்


.

 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close