அரசியல்சினிமா செய்திகள்

பிரதமர் நண்பரிடம் ரஜினி அரசியல் ஆலோசனை

இன்றிரவு அமெரிக்கா செல்கிறார்

சென்னை: ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்ததார். அதன்பிறகு இமயமலைக்கு சென்று கோவில்களில் தரிசனம் செய்துவிட்டு திரும்பினார். இந்நிலையில் இன்று (ஏப் 23)இரவு அவர் அமெரிக்கா செல்கிறார். அங்கு சில நாட்கள் தங்கி மருத்துவ பரிசோதனை செய்ய உள்ளார். இதனால் அரசியல் கட்சி தொடங்கும் பணி தாமதமாகும் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கான செயல்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளதாக் கூறப்படுகிறது.
சென்னையில் வருகிற 25-ந்தேதி (புதன்கிழமை) ராகவேந்திரா மண்டபத்தில் புதிய நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். இதில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு வீடியோகன்ப்ரன்ஸ் மூலம் நடத்துவார் என்று தெரிகிறது. அன்று கட்சி பெயர் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
ஆன்மீக அரசியல் செய்ய உள்ளதாக ஏற்கனவே அறிவித்த ரஜினிகாந்த்தின் கருத்துக்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும், பா.ஜனதாவின் கருத்துக்களையே அவர் பிரதிபலிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. ஆனால் பாஜவுடன் தொடர்பு இல்லை என்றார்.
இந்நிலையில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ரஜினியை அவரது இல்லத்தில் இன்று (ஏப் 23)சென்று சந்தித்தார் .இவர் பிரதமர் மோடிக்கு நெருங்கிய நண்பர் என்பதால் ரஜினி கட்சி தொடங்கினால் அவரது கட்சியுடன் பாஜ இணைந்து செயல்படுவது குறித்து விவாதித்திருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close