சினிமா செய்திகள்பொது செய்திகள்விமர்சனம்

பிகில் (பட விமர்சனம்)

சும்மா வெறித்தனமா இருக்கு...

நடிப்பு: விஜய் (இருவேடம்), நயன்தாரா, யோகிபாபு. விவேக்.
தயாரிப்பு:ஏஜிஎஸ் எண்ட்ர்டெய்ட்மெண்ட்
ஒளிப்பதிவு: ஜி.கே வேணுகோபால்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
டைரக்‌ஷன் : அட்லி
வடசென்னை பகுதியை விட்டால் இப்படிப்பட்ட படங்களை எடுக்க முடியாது என்றளவுக்கு வடசென்னைக்கு இப்போது மீண்டும் ஒரு பெரிய முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. தாதா ராய்யப் பனை பழி வாங்க இன்னொரு கூட்டம் காத்திருக் கிறது. அந்த எரியாவுக்குள்ளயே நுழைந்து எதிரிகளை வெட்டி வீழ்த்தி தனது பலத்தை காட்டுகிறார் ராயப்பன். அவரது மகன் மைக்கேல் (இளவயது விஜய்) கால்பந்தாட்ட வீரர். மாநில அளவில் வெற்றி பெற்று தேசிய அளவில் பங்கேற்க தயாராகிறார். இதற்கிடையில் தந்தை ராயப்பனை அழைத்து கலெக்டர் முன்னிலையில் எதிரிகள் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். அதில் சமாதானம் அடையாமல் ரவுடிகளை எச்சரித்து விட்டு வருகிறார். ரெயில் நிலையத்தில் மகனை வழியனுப்ப வரும் ராயப்பனை எதிரிக் கூட்டம்வெட்டி சாய்க்கிறது, கால்பந்து போட்டிக்கு புறப்பட்ட மைக்கேல் தனது தந்தை வெட்டி சாய்க்கப்படுவதை பார்த்து ஆவேசம் அடைந்து அதே இடத்தில் ரவுடி கூட்டத்தை துவம்சம் செய்கிறார். அன்று முதல் மைக்கேல் குட்டி தாதாவாகிறார். இந்த நிலையில் பெண்கள் கால்பந்தாட்ட குழுவுடன் வருகிறார் விஜய்யின்நண்பர் கதிர். ஒரு கட்டத்தில் மைகேலை தாக்க வரும் ரவுடிகள் கதிரை கத்தியால் குத்த அவர் உயிருக்கு போராடுகிறார். சில நாட்களில் கால்பந்தாட்ட போட்டி என்ற நிலையில் அணியை வழி நடத்த கோச் இல்லாமல் தவிக்கின்றனர். தனக்கு பதிலாக மைக்கேல் என்ற பிகிலை கோச் பொறுப்பு ஏற்க சொல்கிறார் கதிர் வேறு வழியில்லாமல் அவர் கோச் ஆகிறார். ஆனால் விளையாட்டு வீராங்கணைகள் விஜய் மீது நம்பிக்கை வைக்க மறுக்கின்றனர். அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி அணியை வெற்றி இலக்குக்கு எப்படி மைக்கேல் விஜய் அழைத்து செல்கிறார் என்பதே மீதி கதை.பிகில் கதை சுருக்கமே இவ்வளவுபெரிதாக இருக்கும்போது படம் மட்டும் நீளம் குறைவாகவா இருக்கப்போகிறது. அதுவும் கிட்டதட்ட மூன்று மணி நேரம். விஜய்யின் அறிமுக காட்சியே மாஸ் ஆக்கி இருக்கிறார் இயக்குனர் அட்லி. போலீஸ் உடை அணிந்து வரும் ரவுடிகள் மாணவர்களை தாக்க முயலும்போது பதிலுக்கு குப்பத்திலிருந்து ரவுடிகளை மாணவர்கள் போல் சட்டையை மாட்டி விட்டு விஜய் கலாய்ப்பதும் அதையும் தாண்டி தாக்கவரும் போலீஸ் ரவுடிகளை விஜய் அந்தர் செய்வதெல்லாம் விசில் மழையில் நனைகிறது.
பெண்கள் அணிக்கு கோச்சாக பொறுப்பு ஏற்றதும் விஜய்யின் தரை லோக்கால் நடிப்பு கலை கட்டத் தொடங்குகிறது. பெண்கள் அணிக்கு போட்டி வைத்து அவர்களை தன் வழிக்கு கொண்டு வருவதாகட்டும் ஒருவர் மீது ஒருவர் பழி சொல்லும்போது ஒவ்வொருவரையும் கண்டித்து பொறுப்பை உணர வைப்பதாகட்டும் எல்லாமே தூள் கிளப்புகிறது. போலீஸ் நிலையத்தில் உட்கார்ந்த இடத்திலிருந்து முதல்வரின் காரை வழி மடக்குவதாகட்டும் போலீஸ் ஜீப்பை குண்டு வைத்து தகர்ப்பதாகட்டும் எல்லாமே செம கெத்து.
கிளைமாக்ஸ் தொடங்கியதும் அரங்கமே அமைதியாகிவிடுகிறது. எப்படியும் விஜய் அணிதான் ஜெயிக்கப்போகிறது என்று தெரிந் தாலும் ஆட்டத்தில் மோதலை ஏற்படுத்தி ஆடியன்ஸை இருக்கை நுனிக்கு கொண்டு வரும் யுக்தி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.
பெண்கள் அணியின் பிசியோதெரபிஸ்டாக வரும் நயன்தாராவுக்கு அதிக வேலையில்லை. பல சமயங்களில் நயன்தார கதாபாத்திரம் இருப்பதே மறந்து போகிறது. டேனியல் பாலாஜியும், ஜாக்கி ஷெராப்பும் வில்லன்களாக வந்தாலும் சீக்கிரமே டம்மி ஆகிவிடுகிறார்கள். கால்பந்தாட்ட வீராங் கனைகளாக வரும் இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா என ஒவ்வொருவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். யோகிபாபு, விவேக் சிரிப்புக்கு உதவவில்லை. கதிர், ஆனந்தராஜ், சவுந்தரராஜாவுக்கும் ஒரு வேலையும் இல்லை.
படத்தை விஜய் எப்படி தன் தோள் மீது தூக்கி சுமக்கிறாரோ அதேபோல் இன்னொரு பக்கம் ஏஆர்.ரஹ்மான் தாங்கி நிற்கிறார். சிங்கபெண்ணே பாடல் காட்சியும் அதை படமாக்கிய ஜி.கே வேணுகோபாலின் கேமிராவும் அற்புதம். மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது என்பதுபோல் இயக்குனர் அட்லி படத்தின் அத்தனை வெயிட்டையும் தாங்கியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு சமமாக முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்ட பெண்ணுக்கு நம்பிக்கை தந்து விளையாட அழைத்து வரும் சீனும். சமையல் அறையில் முடங்கிய வீராங்கணையை விளையாட வரவழைப்பதாகட்டும் அப்ளாஸ் பெறும் சூப்பர் சீன்கள்
பிகில் காது துளைக்க ஊதுகிறது.

 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close