Fully Entertainment

பரமக்குடியில் 65வது பிறந்த நாளை கொண்டாடிய கமல்

நடிகர் கமல்ஹாசன் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அதை கொண்டாடும் விதமாக நவம்பர் 7, 8 9 என மூன்று நாட்களுக்கு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. நவம்பர்  7ம்தேதி கமல் தனது 65- வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கொண்டாடினர். அதன் ஒருபகுதியாக, பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூரில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற கமல், சகோதரர் சாருஹாசனுடன் சேர்ந்து தந்தை சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார்.

இந்த கொண்டாட்டத்தில் அவரது சகோதரர் சாருஹாசன், மருமகள் சுஹாசினி மணிரத்னம், மகள்கள் சுருதி மற்றும் அக்ஷராஹாசன் மற்றும் நடிகை பூஜா குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பரமக்குடியில் நீண்ட நாட்களுக்கு பின் கமலின் குடும்ப உறவுகள் ஒரே இடத்தில் சந்தித்தனர்.

#Kamal unveil hisfather statue ar Paramakudi

#Kamals 65th Birthday #Kamal60