Trending Cinemas Now
விமர்சனம்

பச்சை விளக்கு (பட விமர்சனம்)

படம்: பச்சை விளக்கு
நடிப்பு: டாக்டர் மாறன், தீஷா, ஸ்ரீமகேஷ், தாரா, மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, நந்தகுமார், ரூபிகா, நாஞ்சில் விஜயன், சிங்கம் புலி, கிரேன் மனோகர்
தயாரிப்பு: டாக்டர் மணிமேகலை
இசை: வேதம் புதிது தேவேந்திரன்
ஒளிப்பதிவு: பாலாஜி
இயக்கம்: டாக்டர் மாறன்

டிராபிக் போலீஸ், டிராபிக் இன்ஸ்பெக்டர் கேள்வி பட்டிருக்கிறோம் இதில் வரும் ஹீரோ மாறன் டிராபிக் வார்டன் ஆக நடிக்கிறார். அவரே உதவி பேராசிரியராக வும் வேடம் ஏற்றிருக்கிறார். சாலை விதிகளை மதிக்கா மல் கார், மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை கண்டித்து அவர்களுக்கு டிராபிக் விதிகள்பற்றி சொல்லித் தருகிறார் மாறன். ஸ்கூட்டரில் வரும் தீஷாவை வழி மறித்து லைசென்ஸ், ஆர்சி புக், இன்சூர்ன்ஸ் என அத்தாட்சிகளை கேட்டு வம்பிழுக்கி றார். எதுவுமே இல்லாமல் திருதிருவென விழிக்கும் தீக்‌ஷாவை 40 முறை போக்குவரத்து விதிகள் எழுதி எடுத்து வரவேண்டும் என்று பனிஷ்மென்ட் தருகிறார். வேண்டா வெறுப்பாக அவற்றை எழுதி வந்தபிறகு தான் தன்னை மிரட்டியது டிராபிக் போலீஸ் இல்லை, டிராபிக் வார்டன் என்பது தெரிகிறது. அவருடன் மோதல் போக்கை தீஷா தொடர்ந்தாலும் ஒரு கட்டத்தில் அவரது நல்ல பண்பை கண்டு காதலிக்கி றார். இப்படியே காட்சிகள் போய்விடுமோ என்று எண்ணும் நிலையில் திடீர் திருப்பதாக தீஷாவின் தங்கையை செல்போனில் ஆபாச படம் எடுத்து திருமணம் செய்யச்சொல்லியும், பணம் கேட்டும் மிரட்டுகிறது ஒரு கூட்டம். இந்த விஷயம் மாறனுக்கு தெரியவர அவர் மோசடி கும்பலை சுற்றி வளைத்து ஆதாரங்கள் திரட்டி போலீசில் ஒப்படைக்கிறார். சிறையிலிருந்து வரும் அந்த கூட்டம் தீஷாவை பழிவாங்க முயல்கிறது. அடுத்து நடப்பது என்ன என்பது கிளைமாக்ஸ்.

பச்சை விளக்கு கமர்ஷியல் படமா, இல்லையா என்றால் இதுவொரு சமூக விழிப்புணர்வு படம் என்று சொல்லலாம். முதல்பாதிவரை போக்குவரத்து விதி களை பற்றியே முழுக்க முழுக்க பேசுகிறது. நான்கு வழி சாலையில் எப்படி வாகனம் போக வேண்டும், கைகளில் சிக்னல் காட்டுவது, சைடு மிர்ரர் (கண்ணாடி) பார்த்து வண்டி ஓட்டுவது, ஹெல்மெட் அணிவது என பல்வேறு அம்சங்களை அடுத்தடுத்து காட்டி இதுவொரு செய்தி படமா என்று கேட்கும் அளவுக்கு தகவல்களை அள்ளித் தந்திருக்கிறார் மாறன். ‘வேதம் புதிது’ படத்துக்கு இசை அமைத்த தேவேந்திரன் இசையில் ஒலிக்கும் ‘தமிழன்தான் ஆள வேண்டும் தமிழ்நாட்டை அதுக்கு உயிரோடு நீ இருக்க வேண்டும்’ என்ற பாடல் சிந்தனையை தூண்டுகிறது. அறிஞர் அண்ணா, காமராஜர் சிலையை பாடல் காட்சியில் சேர்த்திருப்பது சிறப்பு.
வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தை தேர்வு செய்திருக்கும் மாறன் காதலியை நினைத்து சோகம் ஆவதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். அதை தவிர்த்திருக்கலாம். இடை வேளைக்கு பிறகு கதையின் போக்கை மாற்றியிருப்பது திருப்தி அளிக்கிறது. கல்லூரி இளசுகளின் ஆட்டம் பாட்டு என்று தொடங்கி தீஷாவின் தங்கையை மாணவர் ஒருவர் காதலித்து பின்னர் மிரட்டலில் ஈடுபடும்போது காட்சிகளில் கனம் அதிகரிக்கிறது. உன் பெண்ணை கட்டித்தரியா, இல்லாட்டி 20 லட்சம் பணம் தர்ரியா என்று வில்லன் நந்குமார் அன்ட் கோஷ்டி மிரட்டும்போது இப்படியொரு கும்பல் உண்மை யிலேயே இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பு கிறது.
இமான் அண்ணாச்சி சாலை விதிகளை மனம் நோகாமல் சொல்லித்தருவது குழந்தைகள் மனதில் அப்படியே பதியும். ஹீரோயின் திஷா மற்ற நட்சத்திரங்களும் பொறுப்புடன் நடித்திருக்கின்றனர்.
எழுதி இயக்கி ஹீரோவாகவும் நடித்திருக்கிறார் டாக்டர் மாறன். காதல் படம் எடுக்கிறேன் என்று ஏதோவொன் றை எடுத்து வைக்காமல் அர்த்தமுள்ள படமாக பச்சை விளக்கை இயக்கியிருப்பதற்கு தமிழக அரசின் பாராட்டு நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
வேதம் புதிது படத்துக்கு இசை அமைத்த தேவேந்திரன் தென்றல் குளிர் தோய்த்து இசைகளை ரம்யமாக அமைத்து தந்திருக்கிறார்.

‘பச்சை விளக்கு’ போக்குவரத்து விதிகளையும் சொல்கிறது, ஸ்மார்ட்போன் மோசடியையும் தோலுரிக்கிறது.

Related posts

கயிறு (பட விமர்சனம் )

Jai Chandran

2019ம் ஆண்டில் வெளியான 209 படங்கள் பட்டியல்..

CCCinema

அடவி  (பட விமர்சனம்

CCCinema

Leave a Comment