விமர்சனம்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா (பட விமர்சனம்)

படம்: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா
நடிப்பு: ரியோ ராஜ். விக்னேஷ், ராதாரவி, மயில்சாமி, ஷிரின் காஞ்வாலா, பிஜிலி ரமேஷ்
தயாரிப்பு: நடிகர் சிவகார்த்திகேயன்
இசை: ஷபீர்
ஒளிப்பதிவு: யு.கே.செந்தில்குமார்
இயக்குனர்: கார்த்திக் வேணுகோபாலன்

மருந்து கடையில் வேலை செய்து வாடகை வீட்டில் வசிக்கும் அரவிந்த் தனது தம்பிகள் ரியோ, விக்னேஷ் சந்தோஷமாக வாழ தனது சந்தோஷங்களை தியாகம் செய்கிறார். அரவிந்த் மீது இரக்கப்பட்டு அவருக்கு வீடு வாடகை விட்ட மயில்சாமி ரியோ, விக்னேஷுக்கு அட்வைஸ் செய்கிறார். எதையும் காதில் வாங்காமல் தங்களின் யூ டியூப் சேனலுக்கு பப்ளிசிட்டியை பெருக்க போவோர் வருவோரிடம் வம்பிழுத்து அதை யூ டியூபில் போடுகின்றனர்.  மால் ஒன்றில் அமர்ந்திருக்கும் ராதாரவி கழுத்தில் கத்தியை வைத்து விக்னேஷ் மிரட்ட அவரை விடுவிக்க சொல்லி ஷிரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுகிறார் ரியோ. இது எல்லாமே டூப் என்று விவரம் தெரியவந்தவுடன் ரியோவை கன்னத்தில் அறைந்து எச்சரிக்கிறார் ஷிரின். ராதாரவியோ ரியோ, விக்னேஷ் இருவரையும் அழைத்து சில அறிவுரைகள் சொல்வதுடன் நீங்கள் கோடி கோடியாக சம்பாதிக்க நான் உதவுகிறேன் அதற்கு பதிலாக நான் சொல்லும் 3 டாஸ்க்குகளை (சவால்) நீங்கள் செய்து முடிக்க வேண்டும் என்கிறார். அதை ஏற்கும் இருவரும் சவால்களை முடிக்க களம் இறங்கி 2 சவால்களை செய்துமுடிக்கின்றனர். 3வது சவால் செய்யும்போது தங்களது உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று எண்ணி அதை செய்ய மறுக்கின்றனர். அதன்பிறகு நடப்பதை சென்டிமென்ட் டச்சுடன் ஆக்‌ஷன் அதிரடியாக கிளைமாக்ஸ் விளக்குகிறது.

சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் மற்றொரு ஹீரோ ரியோ ராஜ். அவருடன் காமெடி செய்கிறார் விக்னேஷ். இருவருமே சாப்பாட்டுக்கு பாரமாக ஊரை சுற்றித் திரிகின்றனர். அவர்களின் சந்தோஷத்துக்கு தன் சம்பாத்தியம் முழுவதையும் செலவழிக்கும் அரவிந்த் சென்டிமென்ட்டை டச் செய்கிறார். 
வர்த்தக மாலில் ராதாரவியை சுற்றி சுற்றி அரிவாளும் கத்தியுமாக ஒரு குரூப் சுத்துப்போட்டி ருக்க திடீரென்று நுழையும் ரியோவும், விக்னேஷும் காட்சியை காமெடியாக்கிவிடுகின்றனர்.
ராதாரவி சொல்லும் 3 டாஸ்க்குகளை செய்துமுடிப்பதாக ஒப்புக்கொளளும் ரியோ, விக்னேஷ் படாதபாடுபட்டு 2 டாஸ்கை முடிப்பதற்குள் நாக்குதள்ளிவிடுகிறது. 3 வது டாஸ்க்கில் பெண்ணை கொல்லவரும் கொலைகாரனை எந்த ஆயுதமும் இன்றி தடுக்க வேண்டும் என்பதை கேட்டு நடுங்குவது காமெடியின் உச்சம்.

எம்ஜிஆரின் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பாடலை கேட்டு அசட்டு தைரியத்தில் இருவரும் கொலைகாரனை தடுக்கும் முயற்சியில் களம் இறங்கியதும் யாரோ ஒருவர் கொலைக்காரனின் கத்திக்கு பலியாகப்போகிறார் என்று எண்ண வைக்கின்றனர். ஆனால் வழக்கமான இந்த யூகங்களை புறந்தள்ளிவிட்டு இயக்குனர் நிகழ்த்தி காட்டியிருக்கும் காட்சி இளவட்டங்களின் மனத்தில் தைரியத்தை விதைக்கிறது. 

அரசியல்வாதியாக வரும் நாஞ்சில் சம்பத் இன்ப அதிர்ச்சி தருகிறார். நின்ற இடத்திலிருந்தே தேர்தலில் வேட்பாளரை வெற்றி பெற வைக்கும் வித்தையை செய்துகாட்டி மோசடியை அம்பலப்படுத்தி அரங்கை சிரிப்பில் ஆழ்த்துகிறார். மிஞ்சிப்போன காரிதுப்புவாங்க.. துப்பட்டும் அதை துடைச்சிட்டுபோறேன் என்பதை ஒரு பாலிசியாகவே சினிமாவில் அவர் கையாண்டிருப் பது சில அரசியல்வாதிகளின் முகத்திரையை நார் நாராக கிழித்திருக்கிறது. கதாநாயகியாக வரும் ஷிரின் அழகுபதுமையாக வருகிறார். நடிப்புக்கு அதிக வாய்ப்பில்லாவிட்டாலும் மனதில் இடம்பிடித்துக்கொள்கிறார். 
கத்தியால் உன்னை குத்தும்போது எல்லாம் வேடிக்கைத்தான் பார்ப்பான், ஒருத்தனும் உதவிக்கு வரமாட்டான் என்று ரவுடி சவால்விட்டு ரியோவை தாக்கும்போது அடுத்து என்ன நடக்ககுமோ என்று நினைக்க வைக்கும் அந்த ஒரு நொடிக்காகத்தான் இவ்வளவு அக்கபோரையும் நடத்தியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் வேணு கோபாலன் என்பதை உணர முடிகிறது. இயக்குனரின் எண்ணம் பாசிடிவாகவே ஒர்க் அவுட் ஆகி அப்பளாஸையும் அள்ளுகிறது. 
அழுத்தமான கருத்தை கிளைமாக்ஸில் வைத்துக்கொண்டு சின்னபிள்ளைத்தானமாக காட்சிகளை நகர்த்தி செல்வதால் சொல்ல வந்த கருத்தின் கனத்தை அதே அழுத்தத்தோடு சொல்ல தவறியிருப்பது மைனஸ். 

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா-  தைடுயமாக.

 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close