Fully Entertainment

நிலவில் விக்ரம் லேண்டர் சாய்ந்த நிலையில் உள்ளது

பெங்களூரு. செப்: நிலவில் இறங்கிய விக்ரம் லேண்டர் சாய்ந்த்நிலையில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் சாதனை நிகழ்த்தும் வகையில் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி நிலவை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ, சந்திரயான்-2 விண்கலத்தை ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது. விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கியதுதான் சந்திரயான்-2 விண்கலம். விண்கலம் நிலவை நெருங்கியதை தொடர்ந்து ஆர்பிட்டரில் இருந்து, பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் கடந்த 2-ந் தேதி தனியாக பிரிந்தது. படிப்படியாக லேண்டரை நிலவின் மேற்பரப்பை நோக்கி இறக்கி வந்தது.
செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை 1.45 மணியளவில், சந்திரனில் விரம் லேண்டர் சிக்னலை இழந்தது. இதையடுத்து சந்திரனில் விக்ரம் லேண்டர் எங்குள்ளது எனொஅதை நிலவை சுற்றுவரும் ஆர்பிட்டர் மூலம் தேடப்பட்டது. அதில் விக்ரம் லேண்டர் நிலவில் இறக்க திட்டமிடப்பட்ட இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் விழுந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை இஸ்ரோ தலைவர் கே.சிவன் உறுதி செய்தார்.
விக்ரம்லேண்டர் உடையவில்லை.ஆனால் சாயந்தநிலையில் உள்ளது. அதனுடன் சிக்னல் தொடர்பை ஏற்படுத்த விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகின்றனர். அதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும் தெரிகிறது.