விமர்சனம்

நட்புன்னா என்னன்னு தெரியுமா (பட விமர்சனம்)

 
படம்: நட்புன்னா என்னன்னு தெரியுமா

நடிப்பு: கவின், ரம்யா நம்பீஸன், ராஜு, அருண்ராஜா, இளவரசு, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான், அழகம்பெருமாள்
தயாரிப்பு: ரவீந்தர் சந்திரசேகரன்
இசை: தரண்
ஒளிப்பதிவு: யுவராஜ்
இயக்கம்: சிவா அரவிந்த்

சிறுவயது முதல் ஒன்றாக படித்த கவின், ராஜு, அருண்ராஜா 10ம் வகுப்பிலேயே கோட்டு அடிக்கின்றனர். வாலிப வயது ஆனபிறகும் வேலை செய்யாமல் வெட்டியாக சுற்றுகின்றனர். ஒருவழியாக  தொழில் செய்ய முடிவு செய்து கல்யாணத்துக்கு சமையல், ஆர்டர் செய்யும் தொழில் ஆரம்பிக்கின்றனர். வீட்டில் எதிர்ப்பு ஏற்படும் காதல் ஜோடிகளை பிடித்து பெற்றோரர் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்து தொழிலை விருத்தி செய்கின்றனர். இந்நிலையில் ரம்யா நம்பீஸனை பார்க்கும் ராஜுக்கு அவர் மீது காதல் பிறக்கிறது. ஆனால் ரம்யாவோ கவினை காதலிக்கிறார். இதனால் நண்பர்களுக்குள் மோதல் எழுகிறது. நண்பர்களின் பிரச்னை தீர்ந்து கவின் காதல் வெற்றியாகிறதா என்பதற்கு கலகலப்பாக பதில் சொல்கிறது கிளைமாக்ஸ். 

கே.பாக்யராஜ் இயக்கிய இன்றுபோய் நாளை வா படத்தின் தழுவலாக கண்ணா லட்டு தின்ன ஆசையா வந்தது. மீண்டும் இ.போ.நா.வா தழுவலுடன் அதன் 2ம் பாகம் என்று சொல்லும் அளவுக்கு வந்திருக்கிறது ந.எ.தெ. எப்படியும் சொதப்புவார்கள் என்ற எண்ணத்துடன் காட்சிக்கு காட்சி இமைகொட்டாமல் கவனித்தாலும் சொதப்பல் எதுவுமில்லாமல் காமெடியுடன் திரைக் கதையை நகர்த்தி யிருக்கும்  இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம்.

ராஜுவையும் ரம்யா நம்பீஸனையும காதலில் கோர்த்துவிடும்போதே இது ஒப்பேராது, எப்படியும் கவினுக்குத்தான் ரம்யா என்று எழும் எண்ணம் ஒரு சில காட்சிகளுக்கு பின் உண்மையாகிறது. கவின், ராஜுவுக்கு இடையே காதல் போட்டி நடக்கும் நிலையில் திடீரென்று அருண்ராஜாவை யும் இந்த காதல் விளையாட்டில் சிக்க விடுவது காமெடிக்கு பயன்பட்டிருக்கிறது. உன்னை ரம்யா பார்த்தார் என்று அருண்ராஜாவும் நம்பவைத்து அவரும்  ரம்யா காதலிக்க கிளம்பும்போது சிரிப்பு தாங்கல.

கவினும், ராஜுவும் காதல் மோதலில் பிரிந்தபிறகும் அவர்களை ஒரேயடியாக விரோதியாக்கி விடாமல் அவ்வப்போது இருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் சந்திப்பை ஏற்படுத்தி காட்சி களை சரியாக கோர்த்திருக் கிறார்கள். தனிப்பட்ட முறையில் இவர்களில் யார் நன்றாக நடித்திருக்கிறார்கள்  என்ற பாகுபாடு இல்லாமல் மூவருமே நடிப்பில் சரிபங்கு ஈடுபாடு காட்டியிருப்பதால் அவர்களின் வேடங்கள் மனதில் நிற்கின்றன.

கவின், ராஜு, அருண்ராஜா மூவருக்கும் இடையில் சிக்கிக்கொண்டாலும் தனது காதலை லாவமாக காப்பாற்றுகிறார் ரம்யா நம்பீஸன். காமெடி செய்ய காமெடி நடிகர்கள் இல்லையே என்ற குறையை அருண்ராஜா தீர்த்து வைக்கிறார். மன்சூர் அலிகானும் வில்லனாக போக்குகாட்டி காமெடி செய்திருக்கிறார். இளவரசு, அழகம்பெருமாளும் கதை ஓட்டத்துக்கு கைகொடுக்கின் றனர்.
யுவராஜ் ஒளிப்பதிவு பளிச். தரண் இசை பக்கபலம். 

‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’- ‘இன்றுபோய் நாளை பார்ட் 2’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close