சினிமா செய்திகள்பொது செய்திகள்

நடிகர் கிரிஷ் கர்னாட் காலமானார்

ஜனாதிபதி- பிரதமர் - திரையுலகினர் இரங்கல்

சென்னை ஜூன்: நடிகர் கிரிஷ் கர்னாட் பெங்களூரில் இன்று (ஜூன் 10) காலமானார்.
செல்லமே, ஹேராம், மின்சார கனவு, நான் அவன் இல்லை. முகமூடி போன்ற பல்வேறு தமிழ் படங்கள் மற்றும் மலையாளம், தெலுங்கு, கன்னட, இந்தி மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் கிரிஷ் கர்னாட் ( வய்து 81). பெங்களூருவில் வசித்த வந்தார். உடல் நலமில்லாமல் மருத்துவமனை யில் தங்கி சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை 6.30 மணி அளவில் மரணம் அடைந்தார்.
கிருஷ்கர்னாட் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைவுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் கர்நாடக முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி, அரசு நிகழ்ச்சிகள் மற்றும் தான் பங்கேற்கவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் இன்று ரத்து செய்வதாக அறிவித் தார். கர்நாடகாவில் இன்று அரசு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. மேலும் மூன்று நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close