Fully Entertainment

நடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நிலைமைதான் வரும்…

சேலம் நவ: சேலம் மாவட்டம் ஓமலூரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது நடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நிலைமைதான் வரும் என்றார். இதுபற்றி அவர் கூறியதாவது:
நடிகர்கள் வயதாகிவிட்டால் அரசியல் கட்சி தொடங்குகிறார்கள். திரைப்படம் மூலம் கிடைக்கும் விளம்பரத்தைக் கொண்டு தலைவனாக நினைக்கிறார்கள். திரைப்படங்களில் நடித்து வருவாயை ஈட்டும் நடிகர்கள், மக்களுக்காக என்ன செய்தார்கள்.
அவ்வளவு ஏன், தமிழகத்தில் எத்தனை உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன என்பது கூட தெரியாது அவர்களுக்கு தெரியாது. அரசியல் பற்றி நடிகர் கமலுக்கு என்ன தெரியும்? இடைத் தேர்தல் நடை ற்ற 2 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாதது ஏன்? ண்டர்களாவது தனது படத்தைப் பார்க்கட்டுமே என்று இன்னமும் நடித்துக் கொண்டிருக்கிறார் கமல்.
மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதிமய்யம் பெற்ற வாக்குகள் எவ்வளவு? என்றும் மிகப்பெரிய நடிகராக பெயர் எடுத்தவர் சிவாஜி. ஆனால் அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது என்ன நடந்தது? சிவாஜி கணேசனின் நிலைமைதான் நடிகர்களுக்கும் வரும்.
இவ்வாறு முதல்வர் எடப்படி பழனிசாமி கூறினார்.