சினிமா செய்திகள்

நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் மரணம்

சென்னை ஜூன்: பிரபல நகைச்சுவை நடிகரும், திரைப்பட நாடக வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் கவலைக் கிடமான நிலையில் இன்று (ஜூன் 10) காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் மதியம் 2 மணி அளவில் உயிர் இழந்தார்.
கிரேசிமோகன் மறைவுக்கு ஏறாளமான திரையுலகினர் இரங்கல் தெரிவித்திருப்பதுடன், அவரது உடலுக்கு இறுதிஅஞ்சலி செலுத்தினர்
என்ஜினியரிங் படித்த கிரேஸி மோகன் நாடகங்கள் எழுதத் துவங்கினார். பின்னர் சினிமா துறையில் வசனகர்த்தாவாக அறிமுகமாகி நடிகரானார். கமல் ஹாஸனின் ஆஸ்தான வசனகர்த்தாவாக இருந்தவர் கிரேஸி மோகன்.
கமலின் ‘சதி லீலாவதி’ படத்தில் வசனகர்த்தாவாகப் பணியாற்ற ஆரம்பித்த கிரேஸி மோகன் அடுத்து அவருடன் தொடர்ந்து ’காதலா காதலா’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ’அபூர்வ சகோதர்கள்’, ’இந்தியன்’, ’அவ்வை சண்முகி’, ’தெனாலி’, ’பஞ்ச தந்திரம்’ உட்பட பல படங்களில் பணியாற்றினார். சுமார் 3000க்கும் மேற்பட்ட நாடகங்களை நிகழ்த்தியிருக்கும் கிரேஸி மோகனை முதன் முதலில் தனது ‘பொய்க்கால் குதிரைகள்’ படத்துக்கு வசனம் எழுத வைத்தவர் இயக்குநர் பாலசந்தர். வசனகர்த்தாவாகப் பணியாற்றிய அதே சமயம் ஏராளமான படங்களில் நகைச்சுவை நடிகராகவும் தோன்றியிருக்கிறார். தனது டைமிங் காமெடியால் மக்களை சிரிக்க வைத்தவர் கிரேஸி மோகன்..
கிரேஸி மோகன் என்று பெயர் வைத்தது யார்?
கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் நாடக காலங்களில் மோகனின் பெயர் ர.மோகன் என்பதாகவே இருந்திருக் கிறது அதாவது ரங்காச்சாரி மோகன். முதன்முதலாக 1975 ஆம் ஆண்டு, ஆனந்த விகடன் ஆசிரியர் வீ எஸ் வி கேட்டுக் கொண்டதற்கிணங்க மோகன் ஒரு குட்டி நாடகம் எழுதி அனுப்பி அது ‘கலிகால கரிகாலன்’ என்ற பெயரில் ஆனந்த விகடனில் வெளியாகியிருக்கிறது. விகடனில் தனது பெயரில் ஒரு நாடகம் வெளிவந்திருக் கும் சர்ப்பிரைஸ் அனுபவத்தை அனுபவிப்பதற்காக புத்தகத்தைத் திறந்த மோகனுக்கு மேலுமொரு இன்ப அதிர்ச்சியாக நாடகத்தை எழுதியவரின் பெயர் கிரேஸி மோகன் என அச்சாகியிருந்திருக்கிறது. அன்று முதல் ர. மோகன், கிரேஸி மோகன் ஆனார். அந்த வகையில் சொந்த தாத்தா வைத்த பெயரைக் காட்டிலும் விகடன் தாத்தா வைத்த பெயர் தான் காலத்திற்கும் நிலைத்து விட்டதாக கிரேஸி கருதியதுண்டு.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close