விமர்சனம்

தோழர் வெங்கடேசன் (பட விமர்சனம்)

படம்: தோழர் வெங்கடேசன்
நடிப்பு: ஹரி சங்கர். மோனிகா சின்னகோட்ளா
இசை: சகிஷ்னா
ஒளிப்பதிவு: வேதா செல்வம்
இயக்குனர்: மகாசிவன்

சிறுவயதிலேயே பெற்றோரை பறிகொடுத்த ஹரிசங்கர் வழிவழியாக செய்யும் சோடா தயாரிப்பு தொழில் செய்து அதை கடை கடையாக போட்டு சம்பாதிக்கிறார். அதேபகுதியில் தள்ளுவண்டியில் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார் சார்மிளா. அவரது மகள் மோனிகா மூக்கும் முழியுமாக அழகாக இருக்க அவரையே சிலர் சுற்றி வருகின்றனர். அந்த ஊர் கவுன்சிலருக் கும் மோனிகா மீது ஆசை. திடீரென்று சார்மிளா இறந்துவிட மோனிகா அனாதையாகிறார். அவருக்கு ஆதரவு தந்து தன் வீட்டில் அடைக்கலம் தருகிறார் ஹரிசங்கர். திடீரென்று ஒரு நாள் தறுமாறாக வரும் அரசு பஸ் ஹரி மீது மோத அதில் இரண்டு கைகளையும் இழக்கிறார். நஷ்டஈடு கேட்டு கோர்டுக்கு செல்கிறார். வருட கணக்கில் வழக்கு இழுக்கிறது. கடைசியில் ரூ 20 லட்சம் தர கோர்ட் உத்தரவிடுகிறது. ஆனால் நஷ்டஈடு தராமல் இழுத்தடிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அரசு பஸ்ஸை ஹரிசங்கருக்கு ஜப்தி செய்து தருகிறது கோர்ட். அந்த பஸ்ஸை வைத்துக்கொண்டு ஹரி சங்கர் படும்பாடு இறுதியில் நஷ்டஈடு கிடைத்ததா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

கோக், பெப்சி காலத்தில் இன்னுமா கோலி சோடா தயாரிக்கிறார்கள் என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லும்விதமாக படப்பிடிப்பு முழுவதையும் காஞ்சிபுரத்தில் நடத்தி கதைக்களத்தை யதார்த் துக்குள் இறக்கிவிட்டிருக்கும் இயக்குனர் மகாசிவன் அந்த யதார்த்தம் கொஞ்சமும் குறையா மல் கடைசிவரை கொண்டு சென்றிருப்பது அடுத்தடுத்துவரும் காட்சிகளையும் நம்பவைப் பதற்கு சிரமப்பட வைக்காமல் செய்துவிடிகிறது.

ஹரிசங்கர் கதாபாத்திரத்துக்கு எந்த அரிதாரமும் பூசாமல் நிஜபாத்திரமாக நடமாடவிட்டிருக்கிறார் கள். அவரும், நாம்தான் ஹீரோ என்று எந்த நினைப்பும் இல்லாமல் கதாபாத்திரமாகவே மாறியிருப்பது கதாபத்திரத்துக்கு வெற்றியை மாலை சூட்டுகிறது.
இரண்டு கைகள் பறிபோனாலும் தன்னம்பிக்கை யை பறிகொடுக்காமல் அரசை எதிர்த்து போராடி நஷ்டஈடு பெற எடுக்கும்முயற்சிகள் பலேபோட வைக்கிறது. அதேபோல் மோனிகாவும் சாதாரண ஒரு பெண்ணாக வாழ்ந்துகாட்டியிருக்கிறார். இரண்டுகைகளையும் பறிகொடுத்த ஹரிசங்கருக்கு கரம்கொடுத்து தன்னம்பிக்கை ஊட்டுவது அருமை.

கடைசிவரை நம்பிக்கையூட்டிய இயக்குனர் கடையில் எதிர்பாராத முடிவை அமைத்து நம்பிக்கையை சிதைப்பது பெரிய தவறு. இப்படியொரு கிளைமாக்ஸால் சொல்லவந்த நீதியையே சிதைந்துவிடிகிறது.

வர்ணஜாலங்கள் இல்லாத ஒளிப்பதிவு காட்சிகளில் இயற்கை தன்மையை தக்கவைத்திருக்கிறது.

தோழர் வெங்கடேசன் -அஸ்திவாரம் பலமாக இர்ந்தாலும் முடியாத கட்டிடமாக நிற்கிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close