விமர்சனம்

திருமணம் சில திருத்தங்களுடன்(பட விமர்சனம்)

       
 

படம்: திருமணம்
நடிப்பு: சேரன், உமாபதி, சுகன்யா, காவ்யா சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், 
தயாரிப்பு: பிரினிசிஸ் இன்டர்நேஷனல்
இசை: சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு: ராஜேஷ்
இயக்கம்: சேரன் 

வருமான வரித் துறையில் இளம் நிலை பொறியாளராக பணியாற்றுபவர் நேர்மையாளர் சேரன். இவரது தங்கை காவ்யா சுேரஷ். ஜமீன்தார் வம்சத்தை சேர்ந்த சுகன்யா தனது ஒரே தம்பி உமாபதிக்கு தடபுடலாக திருமணம் நடத்த முடிவு செய்கிறார். இதற்கிடையில் உமாபதி, காவ்யாவுக்கு காதல் மலர்கிறது. குடும்பத்தினரிடம் காதலை சொல்ல அவர்களும் ஏற்றுக் கொண்டு திருமணத்தை நடத்த முன்வருகின்றனர். இருகுடும்பத்தாரும் அமர்ந்து பேசி சம்பந்தம் பேசுகின்றனர். அதன்பிறகு மண்டபம், அழைப்பிதழ், சாப்பாடு போன்ற விஷயங்களில் இரு தரப்புக்கும் மனஸ்தாபம் ஏற்படுகிறது. இதில் குழப்பம் முற்றி திருமணமே நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நின்ற திருமணம் மீண்டும் நடக்கிறதா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது. 
சேரன் படம் என்றால் வாழ்க்கையின் யதார்த்தம் பின்னிப்பிணைந்திருக்கும் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், இப்படமும் அப்படித்தான்.

திருமணம் என்ற டைட்டிலிலேயே அதில் இரண்டு குடும்பங்கள் மட்டுமல்ல எண்ணற்ற குடும்பங்கள் இணைந்துவிடுவதை தவிர்க்க முடியாது. அதன்பிறகு பிரச்னைகள், சண்டை, சச்சரவுகள், சந்தோஷம் என எதற்கும் குறையில்லாமல்  கதை நகர்கிறது. காட்சிகளில் யதார்த்தம் காட்டத் துடிக்கும் சேரன் இப்படத்திலும் அதை கறாராக கடைபிடித்திருக்கிறார். 
வருமான வரித்துறை அதிகாரி சேரன், மாப்பிள்ளை வீட்டிற்கு வந்த பின் அவர்களது வருமானத்தை அறிந்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி தன்னை ஒரு நேர்மையான அதிகாரி யாக பறைசாற்றுகிறார். பைசா பைசாவுக்கு கணக்கு பார்க்கும் குணம் கொண்ட சேரன் தனது குணத்தால் எவ்வளவு பணம் மிச்சமாகிறது என்பதை விளக்கும்போது ஓகே போட வைக்கிறார். 
சுகன்யா தனது தம்பி உமாபதியின் திருமணத்தை ஜமீன் அந்தஸ்த்துக்கு ஏற்ப தடபுடலாக எப்படி நடத்தவேண்டும் என்று எண்ணும் நிலையில் சேரனோ தனது தங்கைக்கு தன்னுடைய வசதிக்கு ஏற்ப திருமணம் நடத்த எண்ணுவதும் இருகுடும்பத்துக்கும் இடையே நடக்கும் மோதலுக்கு காரணமாகிறது. 
உமாபதியும், காவ்யாவும் காதல் ஜோடிகளாக இருந்தாலும் எல்லை மீறாமல் பங்களிப்பை வழங்கி நல்ல பிள்ளைகள் என பெயரெடுக்கின்றனர். ஆடம்பரத்துக்காக திருமணத்தை நடத்திவிட்டு கடைசியில் கஷ்டப்படுவதைவிட ஆடம்பரம் இல்லாமல் திருமணம் செய்துவிட்டு வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் காட்சிகள் நிறைவு. 
இயற்கை விவசாயம், அதன்மூலம் கிடைக்கும் பலன் பற்றியும் விளக்கி மனத்தில் இடம் பிடித்துக் கொள்கிறார் சேரன். 
ஜமீன் பாரம்பரியத்தை சேர்ந்த சுகன்யா அதற்கான கம்பீரத்துடனே நடந்துகொள்வதும். பேசுவது தாக நடித்திருக்கிறார். உமாபதிக்கு அதிக வேலையில்லை. வசனம் பேசுவதில் கவனம் செலுத்தி னால் பிரைட் பியூச்சர் காத்திருக்கிறது. 
எம்எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா இருவரும் தங்களது குடும்ப பின்னணிகளை பற்றி பேசும்போது நெகிழ வைக்கின்றனர். சித்தார்த் விபின் இசை அமைக்க, சபேஷ் முரளி பின்னணி இசை அமைத்திருக்கிறார். 
‘திருமணம்’  கலாட்டா கல்யாணம்

 
 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close