Fully Entertainment

தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 நீதிபதிகள் 1,045 பக்க அயோத்தி தீர்ப்பு..

புதுடெல்லி நவ: அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் அயோத்தி பிரச்னையை வைத்து அரசியல் செய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீா் ஆகிய 5 பேரைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்ற ஐந்து நீதிபதி களும் ஒருமித்த தீர்ப்பை அளித்திருப் பதே இந்த தீர்ப்பின் முக்கியம்சமாகும். இது 1,045 பக்கங்கள் கொண்டதாக இருந்தது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17-ம் தேதியன்று பணி ஓய்வு பெற உள்ளார். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினம் உச்ச நீதிமன்றம் விசாரித்துத் தீர்ப்பு வழங்க முடியாது. ஏன் என்றால், விடுமுறை நாட்களில் முக்கிய வழக்குகளின் தீர்ப்பு வழங்கப்படுவதில்லை.
இதனைக் கருத்தில்கொண்டே அயோத்தி வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு நவ.13 முதல் நவ.15-க்குள் இறுதி தீர்ப்பு வழங்கும் எனக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், அயோத்தி வழக்கு மக்களின் உணர்வு ரீதியிலான விவகாரம் என்பதால் எந்த சமூக பிரச்னைக்கும் இடம் தரக்கூடாது என்பதால் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது. நவம்பர் 09 2019அன்று உச்ச நீதிமன்றம் துவங்கியதும் அயோத்தி குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளது. பல ஆண்டுகாலமாக இருந்து வந்த அயோத்தி நிலப் பிரச்னையை அரசியலாக்குவதற்கு தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.