Trending Cinemas Now
விமர்சனம்

தர்பார் (பட விமர்சனம்)

படம்: தர்பார்
நடிப்பு: ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு, சுனில்ஷெட்டி, நிவேதா தாமஸ்
தயாரிப்பு: லைகா சுபாஷ்கரன்
இசை: அனிருத்
ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்
இயக்குனர்: ஏ.ஆர்.முருகதாஸ்

பாட்ஷா, பேட்ட வரிசையில் தர்பாரும் மும்பை பின்னணியை கொண்ட படம் என்றாலும் அப்படங் களில் தாதாவாக வந்த ரஜினிகாந்த் இப்படத்தில் என்கவுன்ட்டர் போலீஸ் ஆதித்ய அருணாச்சலமாக வந்து கலக்கியிருக்கிறார்.
போலீஸ் நிலையம் எரிக்கப்பட்ட நிலையில் மும்பை போலீஸ் மீதான நம்பிக்கை மக்களுக்கு குறைகிறது. போலீஸின் மீது நம்பிக்கை ஏற்படுத்தி மும்பையை தாதாக்களின் பிடியிலிருந்து விடுவிக்க டெல்லியிலி ருந்து மும்பை கமிஷனராக களம் இறக்கப்படுகிறார் ரஜினிகாந்த் (ஆதித்யா அருணாச்சலம்). இளம் பெண்களும், சிறுமிகளும் திடீர் திடீரென கடத்தப் பட்டு விபசார சந்தையில் விற்கப்படுகின் றனர். மேலும் போதை மருந்தை நகரம் முழுவதும் விற்று சட்ட விரோத செயல்களின் கூடாரமாக ஊரையே மாற்றி வைத்திருக்கிறது ஒரு கும்பல். இதில் தொழில் அதிபர் ஒருவரின் மகனுக்கு தொடர்பு இருப்பது ரஜினிக்கு தெரியவர அவனை கைது செய்து சிறையில் அடைக்கிறார். மகனை வெளியில் கொண்டு வர பல வழிகளை கையாள்கிறார் தொழில் அதிபர். ஆள்மாறாட்டம் செய்து மகனை வெளிநாட்டுக்கு அனுப்பிய தகிடுதத்தம் பின்னர் ரஜினிக்கு தெரிய வர ஆத்திரம் அடைகிறார். போலி பாஸ்போர்ட்டில் தப்பிச் சென்ற தொழில் அதிபர் மகனை என் கவுண்ட்ரில் போலீசார் சுட்டுக்கொள்கின்றனர். இந்தநிலையில்தான் சுட்டுகொல்லப்பட்டது தொழில்அதிபரின் சொந்த மகன் இல்லை வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் போதை மருந்து கடத்தல்காரன் சுனில் ஷெட்டியின் மகன் என்பது தெரிய வருகிறது. இதையறிந்து கோபம் அடையும் சுனில் ஷெட்டி ரஜினியின் மகளை விபத்து ஏற்படுத்தி சாகடிக்கிறார். மகள் மீது உயிரையே வைத்திருந்த ரஜினி தன் மகளை சாகடித்தது யார் என்பது தெரியாமல் ஒட்டுமொத்த ரவுடி கூட்டத்தையே அழிக்க அதிரடி என்கவுட்டர் தர்பார் நடத்துகிறார்.
விழா மேடைகளில் யார் பெயரை சொன்னால் கைதட்டல் வரும் என்ற சீக்ரெட்டை தெரிந்துவைத்துக் கொண்டு அடிக்கடி சூப்பர் ஸ்டாரின் பெயரை சொல்லி சிலர் கைதட்டல் வாங்குவார்கள். அந்த டெக்னிக்கைத் தான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தில் கையாண்டிருக்கிறார். இது முருகதாஸ் படம் என்று சொல்வதற்கு மாறாக இது ரஜினிகாந்த் படம் என்று சொல்லும் அளவுக்கு பிரேமுக்கு பிரேம் ரஜினியை ஸ்டைலாகவும், அசத்தலாகவும், அதிரடியாகவும் நடிக்க வைத்து ரஜினிக்கு அப்ளாஸ் வாங்கி தரும் சாக்கில் தனக்கும் கொஞ்சம் அதில் பங்கு வாங்கிக்கொள்கிறார்.

இந்த வயசிலேயும் இப்படி துள்ளல் ஆட்டம் போடு கிறாரா என்று மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு கடுமையான உழைப்பை தந்திருக்கிறார் ரஜினி. நடை, உடை, ஸ்டைல், வசன உச்சரிப்பு, அதிரடி ஆக்‌ஷன் என வரும் ஒவ்வொரு சீனிலும் ஸ்கோர் செய்கிறார். ரஜினி யின் மகளாக நிவேதா தாமஸ். இருவருக்கும் இடையே யான பந்தம் சென்டிமென்ட் எடுபடுகிறது. தனக்கு திருமணம் ஆவதற்குள் தன் தந்தைக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று விரும்பும் மகள் நிவேதா ரஜினியை நயன்தாராவிடம் கோர்த்துவிடுவது காமெடி ரகம்.
80 களில் பார்த்த ரஜினியை காட்டுகிறேன் என்று 2020ல் உள்ள இயக்குனர்கள் புறப்பட்டிருக்கிறார்கள். அதன் விளைவு அவர் ஏற்கனவே செய்த ஸ்டைலையே மீண்டும் செய்யச் சொல்லி போராடிப்பது படத்துக்கு படம் நடந்துக் கொண்டிருக்கிறது. தர்பாரில் அது கொஞ்சம் அதிகமாகவே நடந்திருக்கிறது. பேஸ்மட்டம் வீக் என்று வடிவேலு செய்த காமெடியையும் ரஜினியை செய்ய வைத்திருக்கிறார் கள்.
படையப்பா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம் படங்கள் எல்லாம் வெற்றி பெற்றதற்கு காரணம் அதில் ரஜினியின் தனித்தன்மை வெளிப்பட்டது என்பதை இப்போதுள்ள இயக்குனர்கள் மறந்துவிடக்கூடாது என்பதைத்தான் சமீபத்திய ரஜினி படங்கள் நிரூபித்து வருகின்றன.
நயன்தாரா என்ற பிராண்ட் நேம் மட்டுமே படத்திற்கு பயன்பட்டிருக்கிறது. அவருக்கான நடிப்பை ஸ்கோர் செய்ய இடம் எதுவும் தரப்படவில்லை என்பது ஒரு பெரிய குறைதான். யோகிபாபு இளம் ஹீரோக்களை கலாய்ப்பதுபோல் ரஜினியையும் சில இடங்களில் கலாய்ப்பது ரசிகர்களை நெளிய வைக்கிறது. ரஜினி இனி பேச வேண்டிய பஞ்ச் வசனம் எதுவும் இல்லை என்று இப்படத்தில் அவர் பேசியிருக்கும் ஒருசில பஞ்ச் வசனங்கள் காட்டுகிறது. நம்பறவனுக்கு வயசுங்கறத ஒரு நம்பர், ஒரிஜினலாவே நான் வில்லன்மா? ஐயம் ஏ பேட் காப் போன்ற பன்ஞ்ச்கள் பெரிதாக எடுபட வில்லை. எல்லாமே ரிபீட் பன்ஞ்சாகவே காதில் விழுகிறது.
ரஜினி பாத்திரத்துக்கு தரப்பட்டிருக்கும் முக்கியத்துவம் வில்லன் கதாபாத்திரத் துக்கு தரப்படாதலால் இருவருக்குமான மோதலின் வேகம் குறைந்து விடுகிறது. வில்லன் சுனில் ஷெட்டியை இடை வேளைக்கு பிறகுதான் காட்டுகிறார்கள். அதிலும் அவருடன் ரஜினி மோதும் மோதலையே கிளைமாக்ஸ் ஆக்கியிருப்பது நிறைவடையாத கிளைமாக்ஸாகவே இருக்கிறது.
ரஜினி படம் என்பதால் அவரை நம்பி சில இடங்களில் இயக்குனர் லாஜிக் மீறல்களையும் செய்திருக்கிறார். பேட்ட படத்தில் அசத்திய அனிருத் இப்படத்தில் கொஞ்சம் அடங்கிப்போனது போலவே தெரிகிறது. சும்மா கிழி என அதட்டல் பாடல் போட்டாலும் மரணமாஸுக்கு முன்னால் வேகம் குறைந்துதான் தெரிகிறது.
தர்பார்-முழுபொறுப்பையும் ரஜினி தலையில் சுமத்தியிருக்கிறார்கள்.

 

Three Star Rating Illustration Vector

Related posts

ஜடா விமர்சனம்

CCCinema

இந்த நிலை மாறும் (பட விமர்சனம்)

CCCinema

அடவி  (பட விமர்சனம்

CCCinema

Leave a Comment