Fully Entertainment

தம்பி (பட விமர்சனம்)

படம்: தம்பி
நடிப்பு: கார்த்தி. சத்யராஜ். ஜோதிகா, நிகிலா விமல். சவுகார் ஜானகி, சீதா, அஸ்வந்த்.
தயாரிப்பு: வியாகம் 18 பேரலல் மைன்ஸ்
இசை கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு: ஆர்.டி.ராஜசேகர்
இயக்குனர் ஜீத்து ஜோசப்
மலையாளதில் ஒரு சிபிஐ டைரி குறிப்பு, த்ர்ஷ்யம் போன்ற படங்களை பார்க்கும்போது இப்படிப்பட்ட படங்கள் தமிழில் வருவதில்லையே என்ற ஏக்கம் சிலருக்கு இருந்து வந்தது. முதலில் ஹீரோயிஸம் இல்லாமல் இங்குள்ள ஹீரோக்கள் அப்படிப்பட்ட படங்களை ஒப்புக்கொள்வதில்லை என்ற பேச்சு இருந்தது. அதை பாபநாசம் படத்தில் கமல் உடைத்தெறிந்தார். அந்த புண்ணியத்தை கட்டிக் கொண்டவர் மலையாள பட இயக்குனர் ஜீத்து ஜோசப்/. த்ரிஷ்யம் படத்தை இயக்கியவரும் இதே ஜீத்துதான். அதுதான் தமிழில் பாபாநாசம் பெயரில் ரீமேக் ஆனது. அந்த இயக்குனரின் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது தம்பி.
பாபநாசம் படம் எப்படி குடும்பாங்காக அதே சமயம் ஒரு கிரைம் திரில்லராகவும் இருந்ததோ அதேபோல் வேறுவொரு களத்தில் தம்பி படத்தை குடும்பபாங் குடன் கூடிய கிரைம் திரில்லராக தந்திருக்கிறார்கள். ஜோதிகாவும் கார்த்தியும் சேர்ந்து நடிக்க இதை விட்டால் வேறுபடம் அமையாது என்று கூறும் அளவுக்கு அக்கா, தம்பி என்ற கண்ணியமான கதாபாத்திரத்தில் நடித்து கவர்கின்றனர்.

மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ சத்யராஜ் தனது மனைவி சீதா, மகள் ஜோதிகாவுடன் வசித்து வருகிறார். சத்யராஜின் மகன் 15 வருடத்திற்கு முன்பு காணாமல் போகிறார். கோவாவில் சுற்றுலா கைடாக இருக்கும் கார்த்தியை தன் மகன் என்று கூறி அழைத்து வருகிறார் சத்யாரஜ். ஆனால் கார்த்தி அவரது உண்மையான மகன் இல்லை என்று சத்யராஜிக்கு மட்டும் தெரியும். முதலில் கார்த்தியை ஏற்க தயங்கும் குடும்பத்தினர் மெதுவாக ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் அவரை கொலை செய்ய ஒருகூட்டம் சுற்றி வருகிறது. எதற்காக அவரை கொல்ல முயல்கிறார்கள். சத்யராஜின் உண்மையான மகன் வந்தானா என்ற எதிர்பார்ப்பும் அத்துடன் கூடிய திரில்லர் விஷயமும் கதையை கடைசிவரை நகர்த்தி செல்கிறது.
இருவிதமான கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார் கார்த்தி, மற்றவர்களை ஏமாற்ற அவர் செய்யும் திகிடுதத்தங்கள் ஜாலியாக கதையை நகர்த்துகிறது.அதேநேரம் அக்கா ஜோதிகாவின் பாசத்துக்காக ஏங்குவதும் அவர் முறைக்கும்போதெல்லாம் எனக்கொன்றும் தெரியாது என்பதுபோல் திருதிருவென விழித்தபடி நகர்வதும் உதட்டோரம் நமட்டு சிரிப்பை வரவழைத்தாலும் இதயத்தின் ஓரம் ஒரு உச் கொட்டலையும் வரவழைக் கிறது.
அம்மணி ஜோதிகா வீட்டிலும் இப்படித்தான் கார்த்தியை முறைபீங்களோ என்றுஅருகிலிருந்து முணுமுணுப்பு கேட்கிறது.
இப்பத்தான் ராட்சசி படத்தில் டீச்சராக ஜோதிகாவை பார்த்தாலும் இதிலும் டீச்சரா என்று ஆயாசப் படவைக்காமல் வேறு பாணியில் அவரது நடிப்பை வாங்கியிருகிறார் இயக்குனர். குறும்புத்தனமாக நடித்துவிட்டு சென்றுக்கொண்டிருந்தவருக்குள் எப்படியெல்லாம் திறமைகள் ஒளிந்திருந்திருக்கிறது என்பதை சமீபத்திய படங்களில் வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார் ஜோ, இன்னும் பலவித பரிமாணங்கள் அவருக்குள்ளிருந்து வெளிப்படும் என எதிர்பார்க்கலாம்
ஹீரோயினை இப்படிவிடுவிட்டார்களே என்று சொல்லமுடியாத அளவுக்கு தக்க இடத்தை நிகிலா விமலுக்கு தந்திருக்கிறர்கள். காதல் காட்சிகளில் நளினமும், தனது தந்தை தவறு செய்துவிட்டாரே என்று கவலைப்படும்போதும் நானும் இருக்கிறேன் என்று பிரச்ன்ட் சார் சொல்கிறார் நிகிலா.
குணசித்ர நடிப்புக்கு தன்னைவிட்டால் ஆளே இல்லை என்றளவுக்கு தமிழிலும் தெலுங்கிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் சத்யராஜ். இதிலும் அப்படித்தான் கலக்கி இருக்கிறார்.
பார்த்த ஞாபகம் இல்லையோ என்று பார்வையிலே யே தன்னை நிலை நிறுத்துகிறார் சவுகார் ஜானகி. படத்திற்கு அவரும் ஒரு பலம் . சீதா வழக்கம்போல் டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதை அளவுடன் நடித்துவிட்டு செல்கிறார்.
துணை கதாபாத்திரங்கள் என்றாலும் அம்மு அபிராமி. இளவரசு, பாலா, அஸ்வந்த் யாரும் சோடையில்லை. ஒரு வீட்டில் அக்கா என்பது இன்னொரு அம்மா என்ற வசனம் நிஜத்திலும் நிஜம் ஆனால் சில அக்காவும், சில தம்பிகளும் அப்படியில்லையே என்ற கேள்வியும் சிலருக்கு எழுகிறது அதற்கு இயக்குனர் பதிலும் சொல்லியிருக்கிறார். திரைக்கதையில் வரும் டுவிஸ்ட் எதிப்பார்காதது. கிலைமாக்ஸும் யூகத்திற்கு அப்பாற்பட்டது.
ஆர்.டி ராஜசேகரின் கேமிரா மேடுபாளையத்தின் அழகை மட்டுமல்லாமல் நட்சத்திரங்களின் நுணுக்க மான அசைவுகளையும் அழகாக படமாக்கி இருக்கிறது.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் தாலாட்டு பாடுகிறது.
தம்பி- குடும்பத்துக்கு பிடித்தமானவன்.