அரசியல்பொது செய்திகள்

தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது

ஓட்டல்களில் மதிய உணவை நிறுத்த முடிவு

சென்னை ஜூன் 16: தமிழ்நாட்டில் தண்ணிர் பஞ்சம் தல்வீத்தாடுகிறது. பெண்களும் ஆண்களும் குடங்களுடன் தண்ணீர் தேடி அலைகின்றனர். சென்னையி ஓட்டல்களில் தண்ணிர் பற்றாக்குறையால் மதிய உனவு நிறுத்தபட உள்ளது.

தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக் கின்றனர். தமிழ்நாடு முழுக்க ஆங்காங்கே மக்கள் குடங்களுடன் தண்ணிர்  கேட்டு ஆர்ப்பாடடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் தண்ணிருக்காக அடிதடி சம்வங்களும் நடக்கிறது. பெரும்பாலாஅன ஏரிகள் வரண்டுவிட்டன.
அதன் தாக்கம் தற்போது சென்னையில் உள்ள ஓட்டல் கடைகளிலும் எதிரொலிக்கிறது. சென்னையில் சிறு கடைகள் மூலம் 5 நட்சத்திர ஓட்டல்கள் என சுமார் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ஓட்டல்கள் இருக்கின்றன. இந்த ஓட்டல்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. 60 சதவீதம் ஓட்டல்கள் தண்ணீர் இல்லாமல் பிரச்சினை களை சந்திப்பதாகவும் சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ரவி கூறி இருக்கிறார். மேலும் அவர் கூறும்போது.: ஓட்டல்களில் மதிய உணவு தயாரிப்பதற்குதான் தண்ணீர் செலவு அதிகம். மதிய உணவுக்கு தேவையான அரிசி கழுவுவதற்கும், காய்கறிகளை கழுவுவதற்கும், சமைப்பதற்குm தண்ணீர் தேவைப்படுகிறது. பின்னர், சமைக்க பயன்படுத்திய பாத்திரங்களை கழுவுவதற்கும் நீர் வேண்டும். இப்போது ஏற்பட்டு இருக்கும் தண்ணீர் தட்டுப்பாட் டால், இதை சமாளிக்க எங்களால் முடியவில்லை. நிலத்தடி நீர் இல்லாததால் மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்க முடியவில்லை. குடிநீர் வாரியத்தில் இருந்து எப்போதும் ஓட்டல்களுக்கு தண்ணீர் கிடைப்பது இல்லை.
இதனால் மதிய உணவு நிறுத்துவது தொடர்பாக பல கடைகள் ஆலோசித்து வருகின்றன. தண்ணீர் பிரச்ச்னையை தீர்க்க தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close