Uncategorizedவிமர்சனம்

தடம் (பட விமர்சனம்)

படம்:தடம்

நடிப்பு: அருண்விஜய் (இரட்டை வேடம்), தன்யா ஹோப், வித்யா பிரதீப், ஸ்மிருதி, யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், மீரா கிருஷ்ணன்

தயாரிப்பு: இந்தர்குமார்

இசை:அருண்ராஜ்

ஒளிப்பதிவு: கோபிநாத்
டைரக்‌ஷன்: மகிழ் திருமேனி

ஐடி கம்பெனியில் என்ஜினியராக பணிபுரியும் எழில் (அருண்விஜய்) அதே வளாகத்தில் மற்றொரு நிறுவனத்தில் வேலை செய்யும் தன்யாவை சைட் அடிக்கிறார். எப்படியாவது அவரது காதலை பெற வேண்டும் என்று தினமும் பின்தொடர்கிறார். ஒரு கட்டத்தில் அவரது காதலை பெறுகிறார். இதற்கிடையில் சின்ன திருட்டுகள் செய்து ஊரை சுற்றி வருகிறார் கவின் (அருண்விஜய்). தனது நண்பன் வாங்கிய கந்து வட்டி கடனை திருப்பி செலுத்துவதற்காக பல இடங்களில் லட்சக் கணக்கில் பணம் தேடி அலைகிறார். இந்நிலையில் பணக்கார வீட்டு பையன் ஒருவன் கொலை செய்யப்படுவதுடன் அங்கிருக்கும் லட்சக்கணக்கான பணமும் திருடுபோ கிறது. கொலை செய்தது யார் என்று துப்பு துலக்க முடியாமல் திணறுகிறது போலீஸ் ஒரு கட்டத்தில் எழில், கவின் இருவர் மீதும் சந்தேகம் எழ அவர்களை கைது செய்து விசாரிக்கின் றனர்.  எழில், கவின் இருவரும் ஒருவரையொருவர் சந்திக்க முடியாமல் பிரித்து வைக்கப்படு கின்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் போலீஸ் நிலையத்தில் சந்திக்கும்போது மோதலில் ஈடுபடுகின்றனர். இருவர் மீதும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தபோது அங்கு நீதிபதி எடுக்கும் முடிவு எதிரிகளுக்கு ஆச்சர்யம் அளிப்பதாக அமைக்கிறது. 
அருண்விஜய்க்கு சமீபத்தில் புதிய படம் எதுவும் இல்லை என்ற குறையிருந்தாலும் அதையெல் லாம் ஈடுசெய்யும் வகையில் தடம் அமைந்திருக்கிறது. இரட்டை வேடங்களை கையாள்வதும், அதில் கிளைமாக்ஸ் நெருக்கம் வரை சஸ்பென்ஸை ஓபன் செய்துவிடாமல் திரைக்கதையை நகர்த்தி செல்வதும் மிகவும் அபூர்வம். அந்த பணியை இயக்குனர் மகிழ்திருமேனி நன்றாகவே செய்திருக்கிறார். 
டிப் டாப் உடையில் ஐடி ஆபிசர்போல் வரும் அருண்விஜய், தன்யாவின் காதலை பெறுவதற்காக தினமும் அவரை லிஃப்டில் தனியாக சந்தித்து காபி சாப்பிட அழைப்பதும், அதற்கு அவர் நீங்க கேள்விய தப்பா கேக்கறீங்க, சரியா கேளுங்க வரேன் என்று சொல்லும் விடுகதை விளையாட்டு. அதேபோல் மறுபுறம் ஏடிஎம் மிஷினை பிடுங்கிஎடுத்து வந்து சேட்டு விடம் விற்கும் மற்றொரு அருண் விஜய்யின் திருட்டும் குறும்புகளும் சுவாரஸ்யம். 

திடீரென்று பங்களாவிற்குள் நுழையும் அருண் விஜய் அங்கிருக்கும் வாலிபரை அடித்து கொலை செய்வதும் பின்னர் அங்கிருந்து தப்பி செல்வதுமாக காட்சிகள் பரபரக்கிறது. இரண்டு அருண் விஜய்யில் கொலை குற்றத்தை செய்தது யார் என்பதை கண்டறிய போலீஸ் அதிகாரி பெப்சி விஜயன் நடத்தும் விசாரணையில் சூடு அதிகம். எப்படியாவது அருண் விஜய்யை குற்றவாளியாக்கி அவருக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக் கும் நிலையில் திடீரென்று மற்றொரு அருண் விஜய் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்படுவதும் அதைக்கண்டு பெப்சி விஜயன் ஷாக் ஆவதும் சரியான டுவிஸ்ட்.

இரண்டு அருண் விஜய்யையும் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை ஒரே போலீஸ் நிலையத்தில் அடைத்து வைத்திருப்பதும் ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் சந்தித்துக்கொண்டதும் கண்மண் தெரியாமல் தாக்கிகொல்வது அதிர வைக்கிறது. இருவரையும் சண்டைபோடாமல் பிரிப்பதற்குள் போலீஸ்காரர்கள் உன்னை பிடி என்னைபிடி என்றாகிவிடுகிறார்கள். இருவரிடமும் தனித்தனி அறையில் வைத்து பெப்சி விஜயன் விசாரிக்கத் தொடங்கியதும் இருவரும் கூறும் வாக்குமூலங்கள் ஒரே சாயலில் இருக்கும்போதே இரண்டு அருண் விஜய்க்கும் ஏதோ நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்பதை யூகிக்க முடிகிறது. அதன்பிறகு சந்தேகத்தை போக்குவதற்காக தாய் சோனி அகர்வால், மகன் அருண்விஜய் பிளாஷ்பேக் காட்சிகள் மற்றொரு கிளைக்கதையாக விரிகிறது. இரண்டு அருண்விஜய்யும் அண்ணன் தம்பியா, நண்பர்களா, அவர்களுக்குள் என்ன? என்ற பல கேள்விகளுக்கு விடைகிடைக்கும்போது சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

ஹீரோயின்கள் தன்யா ஹோப், ஸ்மிருதி இருவருக்கும் அதிக வேலை இல்லாவிட்டாலும் போலீஸ் அதிகாரியாக வரும் வித்யா பிரதாப் உருடல் விழிகளில் மிரட்டல் விடுகிறார். அருண் விஜய் நண்பர் வேடத்தில் நடித்திருக்கும் யோகி பாபு வட்டிக்காரர்களிடம் சிக்கிக்கொண்டு பயத்தில் ஆழ்வது யதார்த்தம். கோபிநாத் ஒளிப்பதிவு செழுமை. அருண்ராஜின் வித்தியாசமான இசை டைட்டிலிேலயே ஆவலை உசுப்பிவிடுகிறது. 

பல காட்சிகளை புத்திசாலித்தனமாக கையாண்டிருக்கும் மகிழ் திருமேனி சில காட்சிகளை கடினமான சூழலுக்கு ஆழ்த்தியிருப்பது புரிந்துகொள்ள கடினமான காட்சிகளாக அமைந்திருக்கிறது.

‘தடம்’ – வெற்றி தடம் பதிக்கும்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close