Fully Entertainment

டைரக்டர் கே.பாலசந்தர் சிலை திறந்துவைத்த ரஜினி-கமல்..

சென்னை, நவ. கமல் 60வது ஆண்டு சினிமா நிறைவையொட்டி சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள ராஜ்கமல் புதிய அலுவலக வளாகத்தில் தனது குருநாதர் இயக்குனர் கே.பாலச்சந்தரின் சிலையை அமைத்துள்ளார் கமல்ஹாசன். அந்த சிலையை நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சேர்ந்து திறந்து வைத்தனர்.
பின்னர் நடந்த கூட்டத்தில் ரஜினிகாந்த் பேசியதாவது:-
எனது கலையுலக அண்ணன் கமல்ஹாசன் மற்றும் அனைவருக்கும் நன்றி. என்னைப் போல பல கலைஞர்களுக்கு தந்தை, குரு, பிதாமகன் பாலச்சந்தர்தான். அரசியலுக்கு வந்தாலும், தாய்வீடான சினிமாவை மறக்கமாட்டார் கமல். கலையை உயிராக கொண்டிருப்பவர் கமல்ஹாசன்.
கிராபிக்ஸ் இல்லாத காலத்திலேயே அபூர்வ சகோதர்கள் படம் எடுத்தவர் கமல்ஹாசன். அபூர்வ சகோதரர்கள் படத்தை பார்த்து விட்டு நள்ளிரவு கமல்ஹாசன் வீட்டிற்கு சென்று வாழ்த்தினேன். ஹேராம் படத்தை 30, 40 முறை படத்தை பார்த்துள்ளேன். நான் அடிக்கடி பார்க்கும் படங்கள் ஹேராம், காட்பாதர், திருவிளையாடல் ஆகிய படங்கள்தான் இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில் கவிஞர் வைரமுத்து. மணிரத்னம், ஸ்ருதிஹாசன். அக்‌ஷ்ராஹாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
#Kamal #Rajini #Kamal Haasan and Rajinikanth unveil K Balachander’s statue …