பொது செய்திகள்

டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் பதவி: கவுதம் திடீர் விலகல்

ஐபிஎல் போட்டியில் தொடர் தோல்வி எதிரொலி

 

புதுடெல்லி:ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 11-வது சீசன் கடந்த 7 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டிருந்தார். கொல்கத்தா அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட கவுதம் கம்பீர், நடப்பு சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 
ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 6 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த நிலையில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக கவுதம் கம்பீர் இன்று (ஏப் 25) அறிவித்தார்..
*கேப்டன் பதவியில் இருந்து விலகுவது தனிப்பட்ட முடிவு. கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு இதுதான் சரியான் தருணம் என்று நான் கருதுகிறேன்” என்று கவுதம் கூறினார். டெல்லி டேர்வில்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்டேன்லேக் விலகல்:
சன்ரைசர்ஸ் ஹைதரபாத் ஐபிஎல் அணியின் முக்கிய வீரராக உள்ள பில்லி ஸ்டேன்லேக், காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்டேன்லேக்கை ரூ. 50 லட்சத்துக்குத் தேர்வு செய்தது ஹைதரபாத் அணி. 23 வயது ஸ்டேன்லேக், இந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி ஹைதரபாத் அணிக்குக் கூடுதல் பலமாக விளங்கினார். இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஸ்டேன்லேக் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எகானமி – 8.12. சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டேன்லேக்கின் வலது கை விரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்குப் பறந்துள்ளார் ஸ்டேன்லேக். இதனால் அவர் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close