விமர்சனம்

டுலெட் (பட விமர்சனம்)

நடிப்பு: சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார். தருண், அதிரா பாண்டிலட்சுமி, ரவிசுப்ரமணியன், அருண் எழிலனன். மருது மோகன், எம்,.மணி
தயாரிப்பு: பிரேமா செழியன்
இசை: தபஸ் நாயக்
ஒளிப்பதிவு-டைரக்‌ஷன்: செழியன்

நிஜவாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்கள் வந்திருக்கின்றன. அந்த வரிசையில் வாடகை வீட்டில் வசிப்போரின் கஷ்டங்களை கண்முன் காட்டும் கண்ணாடியாக படமாகியிருக்கிறது டுலெட்.

சினிமா எழுத்தாளர் சந்தோஷ், தனது மகன் மற்றும் மனைவியுடன் வாடகை வீட்டில் வசிக்கிறார். திடீரென்று வீட்டை காலி செய்யச்  சொன்னதும் சந்தோஷும் மனைவியும் பதற்றமாகின்றனர். வேறு வீட்டை பார்ப்பதற்காக புரோக்கருடன் அலைகிறார் சந்தோஷ், எதுவும் அமையவில்லை. வீட்டை காலி செய்யவேண்டிய தேதி நெருங்கும் நிலையில் சந்தோஷும் அவரது மனைவியும் சேர்ந்தே வீடு தேடுகின்றனர். சேட்டு ஒருவர் கட்டிவரும் புதுவீட்டிற்கு குடியேற பேசி முடிக்கும் சந்தோஷும், மனைவியும் பழைய வீட்டை சந்தோஷமாக காலி செய்கின்றனர். கடைசி நேரத்தில் போன் செய்யும் சேட்டு, வீட்டை வேறுநபருக்கு விட்டுவிட்டதாக அதிர்ச்சி தருகிறார். அந்த அதிர்ச்சியுடன் படமும் முடிகிறது. அரங்கில் கைதட்டலும் நிறைகிறது. 
ஒரு விஷயத்தை சொன்னாலும் உருப்படியாக சொல்ல வேண்டும் என்ற இயக்குனரின் எண்ணம் தொடக்கம் முதலே காட்சியை கட்டுக்கோப்பாக கொண்டு செல்ல உதவியிருக்கிறது. கதாபாத்திரங்களும் யதார்த்தை மீறாமல் வாழ்ந்திருக்கின்றனர். கணவன், மனைவிக்குள் நடக்கும் சிறுசிறு சீண்டல்கள், திடீரென நடக்கும் சண்டைகள், தன்னை இழிவாக நினைக்கும் வீட்டு ஓனரிடம் ஈகோ காட்டும் பாங்கு என சீன் பை சீன் நிஜங்களே காட்சிகளாக பதிவாகியிருக் கிறது கேமரா. எத்தனை விருது தந்தாலும் தகும் என்று சொல்வதற்கு முன்பே உலக அளவில் பல்வேறு விருது விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டு விருதுகளை அள்ளிக்குவித்து வந்திருப்பதே படத்தின் தரத்துக்கு தரப்பட்ட சான்று. 
வாடகைதாரரின் கஷ்டத்தை பதிவு செய்த இயக்குனர் செழியன், கடன் வாங்கி பந்தாவாக வீட்டை கட்டிவிட்டு வெளிநாடு சென்றுவிடும் பிள்ளைகளால் தனிமையில் விடப்படும் பெற்றோர்கள் கடன் தவணை கட்ட முடியாமல் திண்டாடும் காட்சியையும் கோடிட்டுகாட்டியது அருமை. 
படத்தில் இசை என்பதற்கான இடம் எதுவும் இல்லை. குருவியின் சத்தம், வாகனங்களின் இரைச்சல், எப்எம்மில் ஒலிக்கும் பழைய பாடல்கள் என இயற்கை, செயற்கை ஒலிகைளை டிசைன் செய்திருக்கிறார் தபஸ் நாயக். 
ஒளிப்பதிவும் ஒரிஜினாலிட்டியை மிஸ் செய்யவில்லை.
‘டு லெட்’ வாழ்க்கை பாடம்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close