சினிமா செய்திகள்திரை பிறமொழி

டிரெண்டிங்கில் பட்டய கிளப்பிய மகத்,- யாஷிகா புதியபடம்

த்ரில்லருடன் வரும் இரட்டை இயக்குனர்கள் மேக்-வென்


கமல்ஹாசனின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மகத்தும், நடிகை யாஷிகா ஆனந்த் நெருக்கமாக பழகினார்கள். இருவரும் காதலிப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வந்த பிறகு இருவரும் பிரிந்தார்கள். இந்த நிலையில், இரட்டை இயக்குனர்களான மேக் வென் (மகேஷ், வெங்கடேஷ்) இயக்கும் புதிய படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள்.
இப்படத்தின் பூஜை இன்று (புதன்) காலை பிரசாத் லேபில் நடந்தது. இயக்குனர் ஆர்,கண்ணன். தயாரிப் பாளர் டி,சிவா நேரில் வந்து படத்தை தொடங்கி வைத்தார்கள்.
நிகழ்ச்சியில் ஹீரோ மகத், ஹீரோயின் யாசிகா கலந்து கொண்டனர். அவர்கள் கூறும்போது.இதுவொரு ஹாரர் திரில்லர் மட்டுமல்ல இத்துடன் நாம் சமூகத்தில் தினமும் சந்தித்தும் அதனால் பாதிக்கப்பட்டும் அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் முக்கிய பிரச்னையை இப்படம் அலசுகிறது. கமர்சியல் அம்சங்களும் கலந்த அசத்தலான படமாக இது இருக்கும்* என்றனர்,
படம் பற்றி இயக்குனர்கள் மெக்வென் கூறும்போது ‘இது ஹாரர் திரில்லர் படமாக இருந்தாலும், நாட்டு மக்கள் எளிதில் தங்களோடு பொருத்திக்கொள்கிற ஒரு முக்கிய பிரச்சினை படத்தில் இருக்கிறது. தமிழ், கன்னடம் ஆகிய 2 மொழிகளில் எடுக்க இருக்கிறோம். இப்படத்துக்கு விரைவில் பெயரிடப்பட உள்ளது.
மகத், யாஷிகாவுடன் முனிஸ்காந்த், மாகாபா. ஆனந்த் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்கி கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். பிரசன்னா ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசை அமைக்கிறார். பாபு ப்ரீத்தி எடிட்டிங் செய்கின்றனர். கிராபோர்டு அரங்கம் நிர்மாணிக்கிறார்.
பலவெற்றி படங்களை தமிழ் திரையுலகிற்கு அளித்துள்ள பரதன் பிக்சர்ஸ் ஆர்,வி,பரதன் பி.ஏ,பி.எல் நிறைந்த பொருட் செலவில் தயாரிக்கிறார். இப்படத்துக்கு பிரபல பிஆர் ஓ நிகில் முருகன் அனைத்து பப்ளிசிட்டிகளும் செய்கிறார்.
இன்று நடந்த பட பூஜை டிரெண்டுங்கில் முதலிடம் பிடித்து பட்டய கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இயக்குனர்கள் கூறினர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close