விமர்சனம்

ஜீவி(பட விமர்சனம்)

படம்: ஜீவி
நடிப்பு: வெற்றி, கருணாகரன், ரமா, ரோகிணி, மோனிகா, அஷ்வினி, மைம்கோபி, தங்கதுரை
தயாரிப்பு: எம்.வெள்ளபாண்டியன், வி.சுடலைகண், சுப்ரமணியம்
இசை: சுந்தரமூர்த்தி கே.எஸ்.
ஒளிப்பதிவு: பிரவீன்குமார்
இயக்கம்: கோபிநாத்

ஊரைவிட்டு சென்னை ஓடிவரும் இளைஞர்கள் பற்றிய கதை நிறைய வந்திருக்கிறது. அந்த பட்டியலில் ஒரு படம் என்று ஒருவரியில் கூறிவிடமுடியாதபடியான வித்தியாசமான படம் ஜீவி. ஊரிலிருந்து வேலை தேடி சென்னை வந்த ஜூஸ் கடையில் வேலைக்கு சேரும் வெற்றி, பக்கத்தில் டீ கடை வைத்திருக்கும் கருணாகரனுடன் நட்பாக பழகுகிறார். தன்னை காதலிக்கும் பெண் பணம்தான் பெரிய விஷயம் என்றுஅவரைவிட்டு பிரிகிறார். மனம் உடைந்த வெற்றி பணத்தை சம்பாதிக்க குறுக்கு வழியை தேர்வு செய்கிறார். தன்னுடன் கருணாகரனையும் கூட்டு சேர்த்துக்கொள்கிறார். தனக்கு வாடகைக்கு வீடு கொடுத்த ரோகிணி வீட்டில் மகள் கல்யாணத்துக் காக சேர்த்து வைத்திருக்கும் நகைகளை திட்டம்போட்டு இருவரும் திருடுகின்றனர். முன்னதாக போலீசிடம் எந்த வகையிலும் சிக்கக்கூடாது என்பதற்காக புத்திசாலித்தனமான சில வேலை களையும் இருவரும் செய்கின்றனர். ஒரு கட்டத்தில் ரோகிணியிடம் நகைகளை திரும்ப ஒப்படைக்க வெற்றி. கருணாகரன் என்னும்போது எதிர்பாராதாக நிகழ்வு நடக்கிறது.

இப்படியொரு கதையை இயக்குனர் கோபிநாத் தேர்வு செய்ததும் இது வித்தியாசமான கதைதான் என்று வெற்றி நடிக்க ஒப்புக்கொண்டதும் இருவருக்குமான புரிதல் மட்டுமே காரணமாக இருந்தி ருக்க முடியும். 8 தோட்டாக்கள் படத்தில் நடித்த ஹீரோ வெற்றி அந்த படத்தில் எம்.எஸ்.பாஸ் கருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டார். அதில் தவறவிட்ட வாய்ப்பை இந்த படத்தில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். கதாபாத்திரத்துக்கு ஏற்ப அவரது தாடி முக தோற்றமும் கைகொடுத்திருக்கிறது. திருட்டு பொருளை எங்கே மறைத்து வைப்பது என்று அவர் போடும் திட்டங்களை கேட்கும்போது காணாமல்போகும் பொருட்கள் எல்லாமே இப்படித்தான் மறைத்து வைக்கப்படுகிறதா என்ற சந்தேகமே வந்துவிடுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் தோன்றினாலும் வித்தியாசமான ஹீரோவாக மனதில் பதிய வேண்டும் என்ற வெற்றியின் காத்திருப்பு அவர் தேர்வு செய்திருக்கும் கதாபாத்திரம் மூலம் உணர முடிகிறது. 

கருணாகரன்தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று வெற்றியின்  நண்பர் கதாபாத்திரத்தை அமைத்திருப்பதாக இப்பட புரமோ நிகழ்ச்சியில் இயக்குனர் கூறியது எவ்வளவு நிஜம் என்பதை கருணாகரனின் கதாபாத்திர  ஈடுபாட்டால் நிரூபணமாகிறது. வெற்றியும், கருணாகரனும் நன்றாக நடித்திருக்கிறார்கள் என்பதை விட கதாபாத்திரத்தில் நன்றாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் எனலாம். வெற்றி சொல்லும் திட்டங்களை கேட்டு அதற்கு எதர் ரியாக்‌ஷன் தரும் கருணா சில சமயம் சிரிக்கவும் வைக்கிறார்.

தொடர்பியல் என்ற ஒரு புதிய கருவுடன் கதையை வடிவமைத்திருக்கும் பாபு தமிழ் ஒன்றுக்கு பலமுறை தனது ஆய்வுகளை நடத்தியிருந்தால்தான் காட்சிகளை குழப்பாமல் தந்திருக்க முடியும். ஸ்கிரிப்ரைட் அதன் ஓட்டத்திலேயே ஓடவிட்டு சிந்தாமல் சிதறாமல் இயக்கியிருக்கிறார் கோபிநாத்.

ஹீரோயின்களில் பார்வையற்ற பெண்ணாக வரும் அஸ்வினி கண்ணுக்குள் ஒட்டிக்கொள்கிறார். சீனியர் நட்சத்திரங்கள் ரோகிணி, ரமா, மைம் கோபியின் கதாபாத்திரங்கள் மிளிர்கின்றன. சுந்தரமூர்த்தி கே.எஸ். கதையோடு இசையை சுழலவிட்டிருக்கிறார். பிரவின் ஒளிப்பதிவும் காட்சியை யதார்த்தமாக கேமராவுக்குள் பதிவிட்டிருக்கிறது. 

ஜீவி- நடைமுறை.

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close