விமர்சனம்

சுட்டுப்பிடிக்க உத்தரவு (பட விமர்சனம்)

படம்:சுட்டுபிடிக்க உத்தரவு
நடிப்பு: விக்ராந்த். சுசீந்திரன், மிஷ்கின், அதுல்யா, ரித்திஷ், பேபி மானஸ்வி
ஒளிப்பதிவு: சுஜித் சாரங்
இசை ஜேக்ஸ் பிஜாய் 
இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா

வங்கி கொள்ளைக்கதை என்று கதைக்கருவை ஒருவரியில் சொல்லியிருந்தார் இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பா. அதற்குள் எதிர்பார்க்காத அதிரடிகளும் வைத்திருக்கிறார் என்பதை படம்பார்க்கும்போதுதான் உணர முடிகிறது.

விக்ராந்த் மகள் புதுவித நோயால் பாதிக்கப்பட சிகிச்சைக்கு பணம் இல்லாமல் திண்டாடும் விக்ராந்த், சுசீந்திரன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து வங்கியில் கொள்ளை அடித்து அந்த பணத்தை கொண்டு சிகிக்சை அளிக்க முடிவு செய்கின்றனர். விக்ராந்த், சுசீந்திரன் கோஷ்டி துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை அடிக்க நுழைகிறது. அது சொதப்பிவிடவே போலீஸ் சுற்றி வளைக்கிறது. அவர்களிடம் பிடிபடாமலிருக்க பொதுமக்களையும் காவல்துறை அதிகாரிகளையும் சுட்டுவிட்டு தப்பிக்கின்றனர். தப்பி செல்லும் கொள்ளையர்களை பிடிக்கும் பொறுப்பு உயர்போலீஸ் அதிகாரி மிஷ்கின் ஏற்கிறார். கொள்ளையர்களை துரத்து துரத்து என்று துரத்துகிறார். இதில் ஒரு கொள்ளையன் துப்பாக்கி குண்டுக்கு பலியாக மற்ற 3 பேரும் தப்பித்து செல்லும்போது ஒரு குடியிருப்பு பகுதியில் நடக்கும் விபத்தால் குடியிருப்பு பகுதியிலேயே சிக்கி கொள்கின் றனர். அந்த குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருக்கும். சில தீவிரவாதிகள்  அன்றைக்கு ஒரு மிகப்பெரிய கார் குண்டுவெடிப்பை நிகழ்த்த திட்டமிடுகிறார் கள். கொள்ளையர்களை பிடிக்கும் பணி ஒருபுறம், தீவிரவாத தாக்குதலை முறியடிக்கும் முயற்சி ஒருபுறம் என போலீஸ் அதிரடி ஆக்‌ஷனில் இறங்குகிறது. இறுதியில் நடந்தது என்பதை எதிர்பாராத திருப்பத்துடன் படம் விளக்குகிறது.

திருடன் போலீஸ் துரத்தல் என்றுதான் கதை தொடங்குகிறது. அதற்குள் தீவிரவாதிகளையும் இணைத்து கதைக்களத்தை சூடுபறக்கவிட்டிருக்கிறார் இயக்குனர்.

விக்ராந்த், சுசீந்திரன் மற்றும் நண்பர்கள் வங்கி கொள்ளையில் தொடங்கும் காட்சி கிளைமாக் ஸில் ஜேம்ஸ்பாண்ட் ரேஞ்சுக்கு துப்பாக்கி சத்தங்களுடன் அதிரடி எழுப்புகிறது. கதைக்குள் இயக்குனர வைத்திருக்கும் சஸ்பென்ஸ் கொஞ்சம் லீக் ஆனாலும் சுவாரஸ்யம் ஒட்டுமொத் தாக குறைந்துபோகும் நிலையில் கதையை லீக் ஆகாமல் பட ரிலீஸ் வரை கட்டிக்காத்திருப்பதே பெரிய விஷயம்.

மாற்றுத்திறனாளியான தனது மகள் பேபி மான்ஸ்வி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டு உருகும் விக்ராந்த் பணத்துக்காக வங்கி கொள்ளை முடிவெடுக்கும்போது நியாயமாகவே தெரிகிறது. அவருடன் இணைந்து தன்னாலும் ஹீரோக்களுக்கு இணையாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன் (வெண்ணில கபடி குழு இயக்குனர்தான்). தீவிரவாதிகள் தங்கியிருக்கும் குடியிருப்புகள் நுழையும் சுசீ தன்னை துரத்தி வரும் போலீசிடம் என்னை சுட்டுவிடாதீர்கள் பணம் தருகிறேன் என்று பதறும்போது பதற்றப்பட வைக்கிறார்.
படத்தில் பாடல், காதல் காட்சி எதுவும் இல்லாதுதடன் விக்ராந்த், ஹீரோயின் அதுல்யா ரவி உள்ளிட்ட யாருக்கும் ஜோடியும் கிடையாது. காதல் காட்சி, பாடல் காட்சி எதையும் எதிர்பார்க்க விடாமல் திரைக்கதையை பரபரப்புடன் அமைத்திருக்கும் இயக்குனர் ராம்பிரகாஷ் அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். 
குறிப்பிடத்தக்க போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார் மிஷ்கின். சும்மாவே அவரது கண்கள் மிரட்டும் இதில் கொள்ளையரையும், தீவிரவாதிகளையும் துரத்தி பிடிக்க வேண்டுமென்றால் சும்மா இருப்பாரா? பட்டய கிளப்பியிருக்கிறார். 
சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு வேகத்தை எந்த இடத்திலும் குறைத்துவிடாமல் சமாளித்திருக் கிறது.
கிளைமாக்ஸுக்கு முன்பே சஸ்பென்ஸ் உடைந்துவிடுமோ என்ற பயத்தால் அவசர அவசரமாக காட்சிகளை முடிக்கப்பார்த்திருக்கிறார் இயக்குனர். அப்படியும் கிளைமாக்ஸை சில கில்லாடிகள் யூகிக்கவே செய்கிறார்கள்.
‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ தெறிக்கும் புல்லட்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close