விமர்சனம்

சித்திரம் பேசுதடி 2 (பட விமர்சனம்)

நடிப்பு: விதார்த், காயத்ரி, ராதிகா ஆப்தே, அசோக், அழகம்பெருமாள்

தயாரிப்பு:எல்.வி.ஸ்ரீகாந்த்லக்‌ஷ்மன், எஸ்.எழிலன், யோகேஷ்ராம்
ஒளிப்பதிவு: பத்மேஷ் மார்த்தாண்டன்
இசை: சாஜன் மாதவ்
இயக்குனர்: ராஜன் மாதவ்

பணக்காரர் ஒருவரை அசோக்குடன் ஆட்டோவில் வரும் விதார்த் கத்தியால் குத்தி கொல்ல முயற்சிக்கிறார். அப்போது அந்த வழியாக வரும் காயத்ரியின் காதலன் விதார்த்தை பார்த்துவிடுகிறார். இந்த தகவலை தன்னை ஏவிவிட்ட நபரிடம் அசோக் சொல்ல அவரோ விதார்த்தை பார்த்த நபரை கொல் அல்லது விதார்த்தை கொல் என கூறுகிறார். இதையடுத்து காயத்ரியின் காதலனை தேடுகிறார் அசோக். இதற் கிடையில் காதலனை மணந்துகொள்ள வீட்டைவிட்டு ஓடிவரும் காயத்ரியிடமிருந்து ரவுடிகள் பையை பிடுங்கி செல்கின்றனர். விதார்த்தால் கொலை தாக்குதலுக்கு ஆளானவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார். அவரை அருகிலிருந்து பார்த்துக்கொள்ள வரும் மனைவி ராதிகா ஆப்தேவும், நண்பர் சுப்புவும் புதிய திட்டம்போடுகின்றனர். தன்னை ஏமாற்றி மணந்துகொண்டதால் கணவரை சாகடிக்க எண்ணுகிறார் ராதிகா, அதேபோல் தொழில்போட்டியில் நண்பரை போட்டுத்தள்ள எண்ணுகிறார் சுப்பு. இதற்கிடையில் பணக்காரர் அஜ்மலுக்கு தனது பங்களாவை மீட்க பணம் தேவைப்படுகிறது. அப்போது வரும் ஆடுகளம் நரேன், அஜ்மலிடம் ஒரு பென்டிரைவை கொடுத்து அதில் மந்திரி ஒருவரின் ரகசியம் அடங்கியிருப்பதாகவும் அதை தருவதற்கு கோடிக்கணக்கில் அவரிடம் பணம் கறக்கச் சொல்லி டீல் பேசுகிறார். இப்படி வெவ்வேறு சூழலில் நடக்கும் நான்கு சம்பவங் களை மையமாக கொண்டு உருவாகியிருக்கிறது சித்திரம் பேசுதடி 2

நான்கு பகுதி கதையை ஒரே தட்டிவைத்து பரிமாறியிருக்கிறார். இயக்குனர் ராஜண் மாதவ்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ராதிகா ஆப்தேவின் என்ட்ரி கொஞ்சம் வில்லத்தனத்தையும் உள்ளடக்கி வந்திருப்பது புதுசு. நெட்டில் டாப்லெஸ் படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் ராதிகா ஆப்தே வழக்கம்போல் தமிழ் படமென்றதும் இழுத்துபோர்த்திக் கொண்டு நடித்திருக் கிறார். ஆனாலும் நடிப்பில் காட்டவேண்டிய கவனத்தையோ, கனத்தையோ குறைக்கவில்லை. விதார்த் கொலை செய்துவிட்டு அறையில் சென்று பதுங்கிக்கொள்கிறார். தன்னை காதலிப்ப தாக கூறும் விபசார பெண்ணை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளி பணத்தை தூக்கி வீசி வெறுப்பை சம்பாதித்துக்கொள்ளும் விசார்த் அடுத்த நொடி அதே பெண்ணை வேறுசில ரவுடிகள் வழிமறித்தும் அவர்களை தாக்கி பெண்ணை விடுவித்து வெறுப்பு காட்டிய மனங்களுக்கு மருந்து தடவி விடுகிறார். 

காதலனுக்காக காத்திருக்கும் காயத்ரியின் பையை, பிக்பாக்கெட் திருடர்களான நிவாஸ், பிளேடு சங்கர் திருடி சென்று விட அவர்களை விடாப்பிடியாக காயத்ரி தனது காதலனுக்கு அடையாளம் காட்டி துரத்துவது காமெடி ரகம். இவர்கள் எல்லோரையும் ஆட்டோ டிரைவராக வரும் அசோக், ஆட்டோ ஓட்டிக்கொண்டே கண்காணிப்பது அண்டர்கரண்ட் டென்ஷன். அரசியல்வாதி அழகம் பெருமாள் தனது ரகசிய வீடியோ அஜ்மலிடம் இருப்பதை அறிந்து பதறுவது பரபர.

உலா என்ற பெயரில் உருவாகி வந்த படம் தற்போது ‘சித்திரம் பேசுதடி 2’ என புதிய பெயரில் வெளியாகி இருக்கிறது. நிறைய கதாபாத்திரங்கள் என்றாலும் எல்லோருக்கும் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜன் மாதவன்.

டாஸ்டாக் கடை யில் திடீரென்று என்ட்ரி கொடுக்கும் மேற்கு இந்திய தீவு கிரிக்கெட் வீரர் டிவைன் பிராவோ நம்மூர் பாடலுக்கு குத்தாட்டம்போட்டு கலக்குவது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. அவருக்கு உரித்தான கண்ணம் ஸ்டைல் நடனத்தையும் ஆடவிட்டிருந்தால் ரசனை கூடியிருக்கும். 
நான்கு விதமான கோணத்தில் பிரச்னைகளை அலசியிருக்கும் இயக்குனர் காட்சி களை அழகாக கையாண்டிருக்கிறார். கூடுதல் சுவாரஸ்யங்கள் சேர்த்திருந்தால் நகர்வில் வேகம் கூடி யிருக்கும். 
‘சித்திரம் பேசுதடி 2’ போரடிக்கவில்லை.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close