விமர்சனம்

சாஹோ (பட விமர்சனம்)

படம்:சாஹோ

நடிப்பு:பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், ஜாக்கி ஷெராப், டினு ஆனந்த், நீல் நிதின் முகேஷ், தேவா, மந்த்ரா பேடி, தணிகல பரணி
இசை: தனிஷ் பக்‌ஷி, குரு ரன்துவா, பாட்ஷா, சங்கர் ஈசான் லாய்
ஒளிப்பதிவு: மதி 
இயக்கம்: சுஜித்

சர்வதேச அளவில் கொடி கட்டி பறக்கும் ராய் குரூப் தனது சட்டவிரோதமான தொழிலை இந்தியாவில் சட்டப்பூர்வமாக நடத்த முடிவு செய்கிறது.. அதற்கு அனுமதி மறுக்கும் மத்திய மந்திரியை கடத்தி மிரட்டல் விடுத்து கையெழுத்து வாங்குகின்றனர். தொழில் ஓஹோ என்று வேகமெடுக்கும் நிலையில் ராய் குரூப்பின் டான்  ஜாக்கி ஷெராப் கார் விபத்தில் கொல்லப்படு கிறார். அவரது வாரிசாக நிர்வாகத்தை கையிலெடுத்து நடத்த வருகிறார் அருண் விஜய். அதற்கு நிர்வாக கமிட்டியில் எதிர்ப்பு எழுவதுடன் பங்குதாரர்களின் லட்சக்கணக்கான பணம் அழிக்கப்படுகிறது. ஆனாலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இரும்பு பெட்டகத்திலிருந்து பணத்தை எடுத்து தர அருண்விஜய் முடிவு செய்கிறார். பெட்டகத்தை திறக்க வேண்டுமென்றால் அதற்கு பிளாக்பாக்ஸ் என்ற கீ தேவைப்படுகிறது. அதை எடுத்துவர மும்பை செல்கிறார் அருண் விஜய்யின் பிஏவான மந்த்ரா பேடி. ராய் குரூப்பின் ஒட்டுமொத்த வேலைகளையும் கண்காணித்து அவர்களை கூண்டோடு பிடிக்க ரகசிய போலீஸ் அதிகாரி பிரபாஸ் களம் இறங்குகிறார். பிளாக் பாக்ஸை கைப்பற்ற வரும் ஏஜென்ட் நீல் நிதினை கண்காணித்து அவரை கையும்களவுமாக பிடிக்கும் நேரத்தில் கதையே தலைகீழாக மாறுகிறது. உண்மையான ரகசிய போலீஸ் நீல் நிதின் என்பதும், அவரது பெயரில் செயல்பட்டது ராய் குரூப்பின் வாரிசான பிரபாஸ் என்ற சஸ்பென்ஸ் உடைந்தபிறகு மீண்டும் மற்றொரு கதை தொடங்குகிறது. ஆக்‌ஷன், அதிரடி, கார் சேசிங், கன் பைட் என சகட்டுமேனிக்கு அதிரடிகள் நிகழ்ந்து கதை ஒருவழியாக முடிகிறது.

பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் படம் சாஹோ. அந்த எதிர்பார்ப்பு ஈடுசெய்யப்பட்டிருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான். கோடிகளில் பணத்தை கொட்டி, கிராபிக்ஸ் பிரமாண்டங்கள் காட்டியிருக்கின்றனர். அதற்கேற்ற கட்டுக்கோப் பான கதை முக்கியம் என்பதை என்ற முணுமுணுப்பு படம் முடிந்து வெளியில் வரும்போது கேட்க முடிகிறது. 

பாகுபலியில் பார்த்த அந்த பிரபாஸ்தானா இது. முதல்பாதி படம் வரையில் உடல் இளைத்து, முகத்தில் பிரைட்னஸ் குறைந்து..என்ன இப்படி பண்ணீட்டீங்க பிரபாஸ் என்று கேட்க வைக்கிறார். இடைவேளைக்கு பிறகுதான் பிரபாஸின் ஒரிஜனாலிட்டி பிக்அப் ஆகிறது. மோட்டார் சைக்கிள் சேசிங், கார் சேசிங், கிளைடர் கட்டிக்கொண்டு விண்வெளி பாய்ச்சல் என அதிரிபுதிரி செய்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி அரங்கை கட்டிப்போடுகிறது. ஆனாலும் பிரபாஸிடம் எதிர்பார்த்த அம்சங்கள் மிஸ்ஸிங்தான்.

ஷ்ரத்தா கபூர் வெறும் பதுமைபோல் வந்துசெல்லாமல் போலீஸ் அதிகாரியாக ஆக்‌ஷன் காட்சிகளிலும் கைவரிசை காட்டுகிறார். பிரபாஸுடனான காதல் காட்சிகளில் நெருக்கும் குறை வால் ரொமான்ஸும் சோபிக்கவில்லை. கிளைமாக்ஸில் வரும் அந்த லிப் டு லிப் முத்தக்காட்சிதான் இளசுகளுக்கு ஆறுதல் தருகிறது. அருண் விஜய் டிப்டாப்பாக வருகிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அவருக்கு அவ்வளவாக வாய்ப்பில்லை. 

இசை அமைப்பாளர்கள் எண்ணிக்கை அதிகம் எண்ணபதால் யார் யார் எந்தெந்த பணிகள் செய்திருக்கிறார்கள் என்பதை கணிக்க முடியவில்லை. பாடல்களை விட பின்னணி இசைதான் காதில் மீண்டும் மீண்டும் எதிரொலிக்கிறது.

சாஹோ-ஆக்‌ஷன் மசாலா.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close