பொது செய்திகள்

சர்வதேச போட்டியில் இருந்து யுவராஜ் சிங் ஓய்வு

கிரிக்கெட் போராட கற்றுத்தந்தது

மும்பை: இந்திய அணியின் முன்னணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழ்ந்த யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 2007 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பையை இந்தியா வெல்ல காரணமாக இருந்த யுவராஜ் சிங் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் 2000-ல் கென்யாவுக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் அறிமுகமானார். 37 வயதாகும் யுவராஜ் சிங், இதுவரை இந்திய அணிக்காக 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 14 சதம், 52 அரைசதங்களுடன் 8071 ரன்கள் எடுத்துள்ளார். குறிப்பாக 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக்கோப்பையில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் 6 பந்துகளையும் சிக்ஸர் விளாசி சாதனை படைத்தார். மேலும் 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்களில் தனது பேட்டிங், பவுலிங், பீல்டிங் என பன்முகத்திறமை யையும் வெளிப்படுத்திய யுவராஜ், இந்திய அணி கோப்பை யை கைப்பற்ற முக்கிய பங்காற்றினார்.
2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையில் 362 ரன், 15 விக்கெட் வீழ்த்திய யுவராஜ் தொடர்நாயகன் விருது பெற்றார். இதனையடுத்து புற்றுநோய் பாதிப்பில் சிக்கி மீண்டு வந்த அவர் தனது பழைய ஆட்டத்திறனை இழந்தார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக யுவராஜ் சிங் இன்று அறிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ”25 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது. தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற விரும்புகிறேன். கிரிக்கெட் எனக்கு போராட கற்றுக்கொடுத்தது, துவண்டு விழுந்தால் எப்படி எழுந்து ஓட வேண்டும் என போதித்தது.  இந்திய அணிக்காக 400 போட்டிகளுக்கு மேல் விளையாடி யது என் அதிர்ஷ்டம். 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப் பையை வென்ற அணியில் இடம்பெற்றதைவிட வேறென்ன வேண்டும். என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் மிகவும் மோசமாக விளையாடியது 2014ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தான். அப்போட்டியில் 21 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தேன். அப்போதே என் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததை உணர்ந்தேன் ” என கூறினார் யுவராஜ்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close