அரசியல்சினிமா செய்திகள்செய்திகள்பொது செய்திகள்

சந்திரயான்-2 லேண்டரில் சிக்னல் துண்டிப்பு

இறுதிகட்டத்தில் திடீர் சிக்கல்

பெங்களுர் செப் 7: ரூ 972 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டது சந்திரயான் 2. இந்த விண்கலன் நிலவை சுற்றி வந்தது. செப். 7ம்தேதி அதிகாலை நிலவில் விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கு முன்னதாக, அதிலுள்ள கருவிகளும், அதனுள் வைக்கப்பட்டிருந்த பிரக்யான் ரோவர் பகுதியில் உள்ள பாகங்களும் சரியாக இயங்குகின்றனவா என்பதை, தரைக் கட்டுப்பாட்டிலிருந்தபடி இஸ்ரோ விஞ்ஞானி கள் சோதனை செய்துபார்த்து, அனைத்தும் சிறப்பாக இயங்குவதை உறுதிசெய்தனர். அதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை (செப் 7ம் தேதி) அதிகாலை 1.00 மணிக்கு மேல் லேண்டரை தரையிறக்குவதற்கான முயற்சியை விஞ்ஞானிகள் தொடங்கினர்.

லேண்டரில் உள்ள புதிய என்ஜின்கள் இயக்கிவைக்கப்பட்டு, லேண்டரின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடங்கியது. கடைசி நிமிடங்களில் லேண்டர் எடுத்த புகைப்படங்களுடன், ஏற்கெனவே இஸ்ரோவிடம் உள்ள தென்துருவ புகைப்படங்கள் ஒப்பீடு செய்யப்பட்டு, அதைத் தரையிறக்கும் இடத்தை விஞ்ஞானிகள் இறுதி செய்தனர். பின்னர் அதிகாலை 1.40 மணியளவில் லேண்டரை தரையிறக்குவதற்கான இறுதிக்கட்ட முயற்சியைத் தொடங்கினர். அப்போது விநாடிக்கு 1.6 கி.மீ. வேகத்தில் சுற்றிவந்த லேண்டரின் வேகம், பூஜ்ஜியம் கி.மீ. அளவுக்கு குறைக்கப்பட்டது. இதற்காக லேண்டரில் பொருத்தப்பட்டிருந்த புதிய சென்சார் களை விஞ்ஞானிகள் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்து, வேகத்தைக் கட்டுப்படுத்தினர்.
இந்த ஒவ்வொரு கடைசிக் கட்ட நிகழ்வும் திட்டமிட்டபடி நடைபெற்றதை, விஞ்ஞானிகள் கைதட்டி வரவேற்றனர். ஆனால், நிலவின் தரை பரப்புக்கு மேல் 2.1 கி.மீ. உயரத்தில் இறங்கிக்கொண்டி ருந்த லேண்டருக்கும் தரைக் கட்டுப்பாட்டு அறைக்குமான சிக்னல் திடீரென்று முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் லேண்டர் கருவி என்ன ஆனது என்பதுபற்றி தெரியவில்லை.
இந்நிகழ்வை பெங்களூரு இஸ்ரோ மையத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த பிரதமர் மோடி பின்னர் பேசுப்போது,’நமது விஞ்ஞானிகளின் அளப்பரிய சாதனையை எண்ணி இந்திய நாடே பெருமைகொள்கிறது. வாழ்க்கையில் வெற்றியும், தோல்வியும் சகஜம். நம்பிக்கை இழக்க வேண்டாம். தைரியமாகச் செயலாற்றுங்கள். மேலும் உத்வேகத்துடன் பணியாற்றுங்கள்’ என்றார்.

லேண்டர் நிலவில் தரையிறங்காததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் கவலை அடந்தனர். இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். அவரை கட்டிபிடித்து ஆறுதல் மோடி..

என்ன காரணத்தால் இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

’நிலவை 100 கி.மீ. தொலைவில் சுற்றிவரும் ஆர்பிட்டர் பகுதி ஓராண்டுக்கு இயங்கி, நிலவை புகைப்படம் எடுத்து தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து அனுப்பும். இந்த ஆர்பிட்டர் எடுக்கும் புகைப் படங்களைக் கொண்டு விக்ரம் லேண்டரின் நிலை என்ன என்பது ஆய்வு செய்து கண்டுபிடிக்க முடியும்’என்று நம்பிக்கை தெரிவித்தார் சிவன்

===.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close