அரசியல்சினிமா செய்திகள்செய்திகள்பொது செய்திகள்

சந்திரயான் 2 நாளைஅதிகாலையில் சந்திரனில் கால் பதிக்கிறது

திக் திக் அனுபவம் காத்திருக்கிறது- iஇஸ்ரோ சிவன் தகவல்

ஸ்ரீஹரிகோட்டா,செப் 7: கடந்த ஜூலை மாதம் 22ம்தேதி இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ‘சந்திரயான்-2’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் 14ம்தேதி ‘சந்திரயான்-2’ விண்கலம் புவி வட்டப்பாதையில் இருந்து பிரிந்து நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியது.பின்னர் 20-ந்தேதி ‘சந்திரயான்-2’ நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதன்பிறகு படிப்படியாக 5 முறை ‘சந்திரயான்-2’ விண்கலத்தின் நிலவின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. கடந்த 2-ந்தேதி ‘சந்திரயான்-2’ விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க தொடங்கியது. பிறகு 2 முறை உள் உந்து விசையை பயன்படுத்தி விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு, அதன் சுற்று வட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கி உள்ளது.
இவ்வளவு நாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் பட்டபாடு நிறைவேறும் நாள் கைகூடி வந்ருக்கிறது.‘சந்திரயான்-2’ விண்கல திட்டத்தின் சவாலான நிகழ்வான நிலவில் விக்ரம் லேண்டர் கால்பதிக்கும் அற்புதம் சனிக்கிழமை (நாளை) அதிகாலையில் நடக்க உள்ளது. நிலவின் தென்துருவத்தில் மிகவும் மெதுவாக அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் பணிகளை நடத்தி வருகின்றனர்.
நிலவின் தென்துருவத்தில் மான்சினஸ்-சி, சிம்பிலியஸ்-எஸ் என்ற பள்ளங்களுக்கு நடுவே விக்ரம் லேண்டர், 70 டிகிரி கோணத்தில் மெதுவாக தரையிறக்கம் செய்யப் படுகிறது. அதைத்தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆய்வை தொடங்க உள்ளது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை ஒரு நிலவு நாள் அதாவது 14 பூமி நாட்கள் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்யும்.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது:
இது எங்களுக்கு ஒரு திகிலூட்டும் தருணமாக இருக்கும். ஒவ்வொருவரின் கண்களும் அவற்றின் கன்சோல்களில் ஒட்டப்படும். டெலிமெட்ரி அளவுருக்கள் நாங்கள் சரியான திசையில் செல்கிறோம் என்று சொல்லிக்கொண்டே இருக்கும், ஆனால் அதே நேரத்தில் அடுத்த கணத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து நிறைய கவலைகள் இருக்கும். இது மிகவும் சிக்கலான செயல்முறை, இது எங்களுக்கு புதியது, ஏற்கனவே செய்தவர்களுக்கு கூட இது ஒவ்வொரு முறையும், ஒரு சிக்கலான செயல்முறையாகும். இங்கே நாங்கள் முதல் முறையாக செய்கிறோம், எனவே இது எங்களுக்கு பதினைந்து நிமிட பயங்கரமாக இருக்கும்.
இவ்வாறு இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.
சந்திரயான் 2 நிலவில் கால்பதிக்கும் நிகழ்வு குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறும்போது.’முக்கியமான தருணத்திற்காக 130 கோடி இந்திய மக்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இன்னும் சில மணி நேரங்களில் சந்திரயான் – 2 விண்கலம் நிலவின் தென் பகுதியில் தரையிறங்க உள்ளது. நமது விண்வெளி விஞ்ஞானிகளின் சாதனையை இந்தியாவும் மற்ற உலக நாடுகளும் மீண்டும் ஒரு முறை பார்க்க உள்ளது.
இந்திய விண்வெளி வரலாற்றில் நடக்கும் மிகச்சிறப் பான தருணத்தை பார்க்க பெங்களூருவின் இஸ்ரோ மையத்திற்கு வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பெங்களூருவின் இஸ்ரோ மையத்தில் என்னுடன் இணைந்து சிறப்பான தருணத்தை பார்வையிடும் இளைஞர்கள், மைகவ் இணையம் மூலம், இஸ்ரோ நடத்திய வினாடி வினாவில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் அதிகளவு இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம் விண்வெளி மற்றும் அறிவியலில் இளைஞர்கள் ஆர்வத்தை இதனை எடுத்து காட்டுகிறது. சந்திரயான் -2 நிலவில் தரையிறங்கும் சிறப்பான தருணத்தை பார்க்கின்றனர். பூடானை சேர்ந்த இளைஞர்களும் பார்வையிடுகின்றனர்.
22 ஜூலை மாதம் சந்திரயான் -2 விண்கலம் ஏவப்பட்டது முதல், அது குறித்த தகவல்களை தொடர்ச்சியாக, ஆர்வத்துடன் கேட்டு வருகிறேன்.
நிலவின் தென்பகுதியில் சந்திரயான் -2 விண்கலம் தரையிறங்கும் சிறப்பான தருணத்தை அனைவரும் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close