விமர்சனம்

சத்ரு (பட விமர்சனம்)

படம்:சத்ரு

நடிப்பு: கதிர். சிருஷ்டி டாங்கே
இசை அம்ரிஷ்
ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி
இயக்குனர் நவீன் நஞ்சுண்டன்

நண்பர்களை அடியாளட்களாக வைத்து, பணக்கார வீட்டு குழந்தைகளாக தேர்ந்தெடுத்து கடத்தி அவர்களிடம் பணம் பறிக்கிறார் லகுபரன். அதேபாணியில் ஒருவரின் குழந்தை கடத்தப்பட அவரோ குழந்தையை மீட்டு தர போலீசில் புகார் செய்கிறார். 
சப்இன்ஸ்பெக்டர் கதிர் இந்த வழக்கை விசாரிக்கிறார். பணம்கைமாறுவதற்கான ஏற்பாடு செய்து அவர்களை டிராக்கர் உதவியுடன் பின்தொடர்ந்து சென்று அடியாளை சுட்டுக் கொன்றுவிட்டு குழந்தையை மீட்டுச் செல்கிறார். நண்பனை கொன்ற கதிரை, தனது நண்பர்களுடன் சேர்ந்து பழிவாங்க திட்டமிடுகிறார் லகுபரன். இந்நிலையில் கதிர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இதையடுத்து கதிரின் குடும்பத்தையே அழிக்க முயல்கிறார் லகுபரன். இக்கட்டான சூழலில் லகுபரனையும் அவரது கூட்டாளிகளையும் கதிர் எப்படி சமாளிக்கிறார்? தனது குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார்? என்பதை விடை சொல்கிறது கிளைமாக்ஸ்.

சப் இன்ஸ்பெக்டர் கெட்டப்பில் பொருத்தமாக வந்து அசத்தியிருக்கிறார் கதிர். பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றிக்கு பிறகு கதிருக்கு ஒரு மவுசு கூடியிருக்கிறது என்றே சொல்லலாம். கடமை தவறாத, கடுமையான போலீசாக அவரது நடிப்பு நன்றாவே எடுபடுகிறது. சிருஷ்டி டாங்கே ஹீரோயினாக வந்து செல்கிறார். நடிப்புக்கு பெரிய வாய்ப்பில்லை.
வில்லனாக லகுபரன் ஒரு பாய்ச்சல் பாய்ந்திருக்கிறார். நண்பர்களாக வரும் மற்றவர்களும் பார்ப்பதற்கு கரடு, முரடாக இருந்தாலும் தோற்றத்தக்கு ஏற்ற நடிப்பையும் வெளியிட்டிருக்கி றார்கள். சுஜா வருணி சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். பொன்வண்ணன், மாரிமுத்து, நீலிமாராணியும் வீண்போகவில்லை. 

அம்ரீஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை சூர்யபிரகாஷ் அமைத்திருக்கிறார். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு இருளிலும் ஒளிர்கிறது. காட்சிகளை ரசிகர்களின் கண்களோடு ஒன்றச் செய்திருக்கிறார்,

போலீஸ், திருடன் கதையை ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரில்லர் பாணியில் இயக்கியிருக்கிறார் நவீன் நஞ்சுண்டான். அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். முதல் பாதி விறுவிறுப்பாகவும், பிற்பாதி வேகம் குறைவாகவும் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். 

அம்ரிஷின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
சத்ரு- தைரியமானவன்.

 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close