Fully Entertainment

சங்கத்தமிழன் (பட விமர்சனம்)

படம்: சங்கத்தமிழன்
நடிப்பு: விஜய் சேதுபதி. ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், நாசர், ரவிகிஷன். சூரி
தயாரிப்பு: பாரதி ரெட்டி
இசை:விவேக்-மெர்வின்
ஓளிப்பதிவு:வேல்ராஜ்
இயக்குனர்: விஜய் சந்தர்

சினிமாவில் பெரிய ஸ்டார் ஆக வேண்டும் என்று கிடைக்கும் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. அவரது நண்பர் சூரியும் எப்போதும் விஜய்சேதுபதியுடன் சுற்றுகிறார். கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு பப் செல்கின்றனர். அங்கு பணக்கார வீட்டுப்பெண் ராஷிகண்ணவை சந்திக்கிறார். இந்த சந்திப்பு மோதலில் தொடங்கினாலும் பிறகு நட்பாக தொடர் கிறது. போடோகிராபி படிக்கும் ராஷி கண்ணா குடிசை மாற்றுபகுதியில் வாழ்பவர்களின் வாழ்க்கையை படம் எடுக்க விஜய்சேதுபதி உதவியை நாடுகிறார். அவரும் உதவுகிறார். இருவரும் சுற்றுவதை கவனித்த கூட்டம் ராஷி கண்ணவை கடத்துகிறது. அங்கு வரும் விஜய்சேதுபதி அதிரடியாக தாக்குதல் நடத்தி ராஷியை காப்பாற்றுகிறார். இதை நேரில் பார்க்கும் ராஷியின் தந்தை ரவி கிஷண் விஜய்சேதுபதியை கண்டு அதிர்ச்சி அடைகி றார். பிளாஷ்பேக்கில் விஜய்சேதுபதி சாதாராண ஆள் கிடையாது என்பது தெரிகிறது. நிலங்களை வாங்கி காப்பர் தொழிற்சாலை கட்டவிருந்த திட்டத்தை மக்கள் ஆதரவுடன் விரட்டியடிக்கிறார். அதன் பிறகு நடப்பது என்ன என்பதை படம் தடாலடியாக விளக்குகிறது.

விஜய் சேதுபதிக்கு இதில் இரட்டை வேடம் கல்லூரி மாணவியை மானபங்கப்படுத்த துணியும் ஜான் விஜய்யை மாஸ் என்ட்ரி கொடுத்து தாக்கி ரசிகர்களிடம் அப்ளாஸ் அள்ளுகிறார். சங்கத் தமிழன் என்று டைட்டில் வைத்துவிட்டு விஜய்சேதுபதி இப்படி சும்மாவே சுற்றி வருகிறாரே என்று யோசிக்கத் தொடங்கும்போதுதான் அந்த பிளாஷ் பேக் ஓப்பன் ஆகிறது. சுற்றிலும் பசுமைநிறைந்த அந்த கிராமத்தில் அப்பா அம்மா என்று குடும்பத்துடன் விஜய்சேதுபதி வசிக்கும்
சென்ட்டிமென்ட் சீன் தொடங்குகிறது,
நிவேதா பெதுராஜின் என்ட்ரியும் இளவட்டங்களுக்கு ட்ரீட் ஆக வருகிறது.
சந்தோஷமான குடும்பம் அரசியல் சதி கார்ப்பரேட் முதலாளித்துவம் நடுவில் ஒரு குடும்பம் சிக்கினால் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கிறோமோ அது நடக்கிறது. குண்டு வெடித்து குடும்பமே சின்னாபின்னமாகிறது.
தன்னை காப்பாற்றியது முருகன் என்று தந்தையிடம் ராஷி கண்ணா சொல்ல அவன் முருகன் இல்லை சங்கத்தமிழன் என்று பிளாஷ்பேக்கிற்கு வில்லன் லீட் கொடுக்கும்போது அரங்கில் விசில் பறக்கிறது அதற்கேற்ப நெற்றியில் குங்கும பொட்டுடன் ஜீப்பில் வந்து பந்தாவாக இறங்கி ரசிகர்கலீன் எதிர்பார்ப்பை பிற்பகுதியிலும் பூர்த்தி செய்கிறார் விஜய்சேதுபதி. சண்டை காட்சிகளில் எவ்வளவு பெரிய குண்டர்கள் வந்தாலும் அவர்களை ஒற்றே அடி அடித்து வீழ்த்துவதும். தலைக்கு மேல் தூக்கி பந்தாடுவதுமாக அமர்க்களப்படுத்துகிறார்..
பல காட்சிகளில் முன்பைவிட இப்போது விஜய்சேதுபதி வெயிட் போட்டதுபோல் தெரிகிறார். ஹீரோவுக்கான உடற்கட்டை அவர் பராமரிப்பது அவசியம்.
ராஷிகண்ணா. நிவேதா பெதுராஜ் இருவருக் குமே பெரிதாக வேலையில்லை. ஊரே மெச்சும் தலைவராக வருகிறார் நாசர். சூரி முதல் பாதிவரை விஜய்சேதுபதியுடன் சுற்றி ஆங்காங்கே சிரிப்பு சில்லரையை சிதற விடுகிறார் சூரி.
இயக்குனர் விஜய் சந்தர் துணிச்சலாக இந்த காலகட்ட கதைக் களத்தைத்தான் தொட்டிருக்கிறார், அதை இன்னும் அழுத்தமாகவும். வித்தியாசமாகவும் சொல்லியிருந்தால் பார்முளா கதையாக இல்லாமல் இருந்திருக்கும்.
வேல்ராஜின் ஒளிப்பதிவு கிராமத்து பின்னணியில் பிற்பகுதி காட்சிகளை படமாக்கியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது.
விவேக்- மெர்வின் இசையில் கமலா கலாசா பாடல் ஆட்டம்போடவைக்கிறது. விஜய் சேதுபதி படத்தில் இப்படியொரு குத்தாட்டமா… பேஷ்.. பேஷ்.
படம் நீண்டுக்கொண்டே இருப்பதுபோன்ற உணர்வை தவிர்க்க தேவை இல்லாதகாட்சிகளில் கத்தரி வைத்தால் வேகம் தன்னால் கூடிவிடும்
‘சங்கத்தமிழன்’ போராட்டக்காரன்.