விமர்சனம்

கோக்கோ மாக்கோ (பட விமர்சனம்)

நடிப்பு: ராம்குமார், தனுஷா, சாம்ஸ், ஒய்.ஜி.மகேந்திரன், சந்தானபாரதி
ஒளிப்பதிவு: சுகுமாரன் சுந்தர்
இசை: அருண்காந்த் வி
இயக்குனர்: அருண்காந்த்.வி

கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றிற்கு பாடல் நிகழ்ச்சி நடத்துவதற்காக பிராண்டட் கம்பெனியின் ஆல்பம் தேடுகிறார்கள். கடைசி நேரத்தில் ஆல்பம் கிடைக்காததால் வாய்ப்பு கேட்டு பாடல் களை அனுப்பி வைத்த இசை அமைப்பாளர் அருண்காந்த்.வி, பாடல்களை எப்படியாவது நிகழ்ச்சிக்கு பயன்படுத்த கோ ஆர்டினேட்டர் எண்ணுகிறார். அதற்கு எம்டியிடம் பர்மிஷன் வாங்கி அருண்காந்திடம் இசை ஆல்பத்துக்கு வீடியோ தயார் செய்து தர கேட்கிறார்கள். அதற்கு கேமராமேனாக சாம்ஸை தேர்வு செய்து அனுப்புகிறார். ஒய்.ஜி.மகேந்திரன் மகன் ராம்குமார், சந்தானபாரதி மகள் தனுஷாவை வைத்து ஆல்பத்தை ரகசியமாக தயாரிக்க எண்ணி அவர் களுடன் பயணம் செல்கிறார் சாம்ஸ். ஜோடியின் காதல் சுவாரஸ்யங்களை படமாக்கி வீடியோவை அருண்காந்துக்கு அனுப்பி வைக்கிறார் சாம்ஸ். இதற்கிடையில் ராம்குமார் – தனுஷா தங்களின் காதல் லீலைகளை நடத்தும்போது தடாலடி கூட்டம் ஒன்று வந்து அவர் களுக்கு திருமணம் செய்து வைக்கிறது. இறுதியில் அருண்காந்தின் ஆல்ப கனவு நிறைவேறியதா? காதல் ஜோடிகள் முடிவு என்ன ஆனது என்பதற்கு பதில் சொல்கிறது படம்.

இயக்குனர் அருண்காந்த் மிக யதார்த்தமாக படம் இருக்க வேண்டும் என்பதற்காக ரெக்கார்டிங் அறையில் மேஜை மீது கால் வைத்துக்கொண்டு எடிட்டரிடம் ஜாலியாக பேசியபடி ஆல்பத்தை தயார் செய்ய முயற்சி மேற்கொள்வது திரைப்பட வடிவிற்கு ஏற்றதாக அமையவில்லை. எடுக்கும் முயற்சியை சின்சியராக எடுப்பதுபோல் காட்டியிருக்கலாம்.
இளம் ஜோடிகள் ராம்குமார், தனுஷா டேட்டிங் புறப்பட்டதும் கூடவே தொற்றிக் கொண்டு செல்லும் சாம்ஸ், அவர்களை வைத்து காமெடி வட்டம் அடிகிறார். உடன் வரும் அசிஸ்டென்ட்டை டென்ஷன் ஏற்றி பின்னர் அவரிடம் சகஜமாவது ரசனை. திடீரென்று வரும் ரவுடி கூட்டம் தனுஷாவை சுற்றிவளைத்து மிரட்டி திருமணம் செய்து வைப்பது எதிர்பாரத திருப்பமாக இருநதாலும் லாஜிக் மிஸ்ஸிங். 

ராம்குமார், தனுஷா, அஜய் ரத்னம், சாம்ஸ், டெல்லி கணேஷ், தினேஷ், சந்தான பாரதி, ஒய்.ஜி.மகேந்திரன், சாரா ஜார்ஜ், வினோத் வர்மா என அனைத்து கதாபாத்திரங்கள் நிறைவு செய்திருக்கின்றனர். இயக்குனர் அர்ண்காந்த்துக்கு படத்தை யதார்த்தமாக் சொல்ல ஆசை இருக்கிறது அதற்கான் மெனக்கெடல்தான் குறைவாக தெரிகிறது.


கோகோ மாக்கோ’ புதிய முயற்சி.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close