விமர்சனம்

கொலைகாரன் (பட விமர்சனம்)

படம்: கொலைகாரன்

நடிப்பு: விஜய் ஆண்டனி, அஷிமா நார்வால், நாசர், சீதா, பகவதி பெருமாள், கவுதம், சதிஷ், சம்பத் ராம்
தயாரிப்பு: பி.பிரதீப்
இசை: சைமன் கே.கிங்
ஒளிப்பதிவு: கல்யாண்
இயக்கம்: ஆண்ட்ரு லூயிஸ்
ரிலீஸ்: தியா மூவிஸ் ஜி.தனஞ்செயன்

அடுக்குமாடி குடியிருப்பில் எதிரெதிர் வீட்டில் விஜய் ஆண்டனி, அஷிமா தங்கியிருக்கின்றனர். இருவரும் வெவ்வேறு கம்பெனியில் வேலை செய்கின்றனர். அஷிமா செல்லும் இடங்களை பின்தொடரும் விஜய் ஆண்டனி ஒரு கட்டத்தில் கொலை செய்கிறார். யாருக்கும் தெரியாமல் நடந்த கொலை என்றாலும் அதை மோப்பம் பிடிக்கிறார் போலீஸ் அதிகாரி அர்ஜூன். கொலை பற்றி துப்பறிய பல்வேறு விசாரணை முறைகளை கையாள்கிறார். ஒரு கட்டத்தில் கொலைப் பழியை அஷிமா மீதும் சுமத்துகிறார். இதையறிந்த விஜய் ஆண்டனி தான்தான் கொலை செய்ததாக போலீசில் சரண் அடைகிறார். அதை நம்ப மறுக்கிறார் அர்ஜூன். ஒரு கட்டத்தில், நடந்தது ஒரு கொலை அல்ல, இரட்டை கொலை என்று தெரியவர பரபரப்பு தொற்றிக்கொள் கிறது. இரண்டு கொலைகளையும் செய்தது யார் என்ற கோணத்தில் புதிதாக விசாரணை தொடங்குகிறது. பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு கொலைகாரன் யார் என்பதை சொல்கிறது கிளைமாக்ஸ்.


ஹீரோயின் அஷிமாவை கழுத்தை அறுத்து கொல்லும் ஆரம்ப காட்சியுடன் படம் தொடங்குகிறது. அதேசமயம் விஜய் ஆண்டனி மேலும் இரண்டு, மூன்றுபேரை போட்டுத்தள்ளு கிறார். டைட்டிலுக்கு ஏற்ப கொலையோடு ஆரம்பிக்கும் கதை தொடக்கத்தில் தெளிவாக நகர்ந்தாலும் இடைவேளைக்கு பிறகு கொலைகாரன் யார் என்பதை மாற்றி மாற்றி சொல்லும் போது மண்டை குழம்பிவிடுகிறது. ஒரு சீன் விட்டாலும் கதையின் டவிஸ்ட் புரியாமல்போய் விடும். 
புன்சிரிப்புகூட இல்லாத இறுக்கமான முகத்துடன் வரும் விஜய் ஆண்டனி கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக தன்னை கண்முன்நிறுத்துகிறார். ஒவ்வொரு நாளும் அஷிமா வீட்டிலிருந்து புறப்படும்போது அதே நேரத்தில் விஜய் ஆண்டனியும் வீட்டிலிருந்து புறப்பட்டு செல்லும்போது எதற்காகவே அவரை ஃபாலோ செய்கிறார் என்ற சந்தேக கோடுகளை நிழலாடவிடுகிறார். இருவரும் காதலிக்கிறார்களோ என்று எண்ணும்போது நானும் அந்த பெண்ணும் காதலிக்கிறோம் என்று விஜய் ஆண்டனி சொல்லும்போது காதலுக்காகத்தான் கொலை செய்திருக்கிறார் என்று நம்ப வைக்கிறார். 

அஷிமாவிடம் போலீஸ் அதிகாரி அர்ஜூன் விசாரிக்கும்போது நானும், அவரும் (விஜய் ஆண்டனி) காதலர்கள் இல்லை நட்புமுறையில்தான் பழக்கம் என்று புதுசா ஒரு ரீல் விட்டு தன்னை விசாரிக்க வந்த அர்ஜூனையும், படம் பார்க்கும் ரசிகர்களையும் குழப்பி மண்டை சூடு ஏற்றுகிறார் ஆஷிமா.
ஒரு கட்டத்தில் கதையை எப்படி முடிப்பது என்று தெரியாமல் இயக்குனர் குழம்பிவிட்டாரோ என்றுகூட எண்ணத்தோன்றுகிறது. கிளைமாக்சில்தான் எல்லா மண்ட குடைச்சல் குழப்பத்துக்கும் தெளிவான விடை கிடைக்கிறது. அஷிமாவும் அவரது அம்மாவாக நடித்திருக்கும் சீதாவும் கொலை நடக்கும் காட்சிகளில் நடுங்கி பயமுறுத்துகின்றனர்.
விஜய் ஆண்டனி ஒரு மாஜி போலீஸ் அதிகாரி என்ற சஸ்பென்ஸ் அவரது கதாபாத்திரத்துக்கு வலுசேர்க்கிறது.
விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார் அப்படியென்றால் அர்ஜூன் வில்லனா என்று கேள்விக்கே இடமில்லாமல் ஆரம்பத்திலேயே அவரை போலீஸ் அதிகாரியாக காட்டி சந்தேகத்தை தீர்த்துவிடுவதால் அவர் விஷயத்தில் குழப்பங்களும் இல்லாமல் தெளிவு படுத்திவிடுகிறார் இயக்குனர். அர்ஜுனுக்கு ஆலோசனை கூறும் ரிடயர்டு போலீஸ் அதிகாரியாக வருகிறார் நாசர். 
சைமன் கே.கிங் பின்னணி இசை ஓ.கே. பாடல்களில் பீட்டை அதிகம் ஏற்றி குத்துப்பாடலாக மாற்றியிருந்தால் தொய்வை தவிர்த்திருக்கலாம்.

‘கொலைகாரன்’ ஹாலிவுட் பாணி கிரைம் த்ரில்லர்.

.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close