விமர்சனம்

கொரில்லா (பட விமர்சனம்)

படம்: கொரில்லா
நடிப்பு: ஜீவா, ஷாலினி பாண்டே. யோகிபாபு, சதீஷ். விவேக்பிரசன்னா, மதன்குமார்
இசை: சாம் சி.எஸ்
ஓளிப்பதிவு: குருதேவ்
இயக்குனர்: டான் சாண்டி
ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா மூவரும் நண்பர்கள். சதீஷ் ஐடிகம்பெனியில் வேலை செய்கிறார். ஜீவா
சின்ன சின்ன திருட்டு செய்கிறார். விவேக்பிரசன்னா நடிகர் ஆகும் ஆசையில் இருக்கிறார். இந்த நண்பர்கள் கூட்டத்துடன் சிம்பன்சி குரங்கு ஒன்றும் நட்பாக பழகுகிறது, இவர்கள் தங்கி இருக்கும் வீட்டிற்கு கீழே பணம் சம்பாதிக்க சென்னை வந்த மதன் குமார் தங்கியிருக்கிறார், இந்நிலையில் சதீஷுக்கு வேலை பறிபோகிறது. மூவரும் பெரிதாக கொள்ளையடித்து வாழ்க்கையில் செட்டிலாக திட்டம்போடுகின்றனர். அவர்களுடன் ஒட்டிக்கொள்ளும் மதன்குமார் வங்கியில் கொள்ளையடிக்க ஐடியா தருகிறார். திட்டம்போட்டு ஒரு வங்கிக்குள் நுழைகின்றனர். துப்பாக்கி காட்டி பணத்தை கொள்ளையடிக்கின்றனர். இதற்கிடையில் போலீஸ் வங்கியை சுற்றி வளைக் கிறது. போலீசிடமிருந்து ஜீவாவும் கூட்டாளிகளும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பது கிளைமாக்ஸ்.
முதல்காட்சி முதலே சிம்பான்சியுடன் ஜீவா கோஷ்டி அடிக்கும் லூட்டிகள் காமெடி. வங்கியில் கொள்ளை யடிக்க டாஸ்மாக்கில் குடிக்கும்போது மதன்குமாரிடம் ஒப்புக்கொள்ளும் ஜீவாவும் நண்பர்களும் மறுநாள் மதன்குமார் வந்தததும் விரட்டியடிப்பதும் காமெடி யாகவே நகர்கிறது.
ஒருவழியாக கொள்ளையடிக்க ஜீவா கோஷ்டி வங்கிக்குள் நுழைந்தபிறகும் சீரியஸ்னஸ் இல்லாமல் காமெடி செய்துகொண்டிருப்பதால் காட்சிகளில் ஒட்டமுடியவில்லை. போலீஸ் சுற்றிவளைத்ததும் எப்படி தப்பிக்கபோகிறார்களோ என்று நினைத்தால் போலீசிடமே 20 கோடி கேட்டு போலீஸ் அதிகாரி ராதாரவியை கடுபேற்றுவதும் அடிக்கடி வங்கிக்குள் இருந்து ஒவ்வொருவராக வந்து செல்வதும் ஆனாலும் அவர்களை போலீஸால் ஒன்றும் செய்யமுடியாமல் திணறுவதும் கல கல.
எப்படி சென்மென்டுக்குள் கதையை கொண்டு செல்வது என்று யோசித்து திடீரென்று விவசாயிகள் கடனைஅரசு ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை வைப்பது கதையின் போக்கையே திசைதிருப்புகிறது. அடுத்தடுத்த காட்சிகளில் விவசாய கடன் பிரச்னையை பிரதானமாக கொண்டு நகர்த்துவது புத்திசாலித்தனம்.
சிம்பான்சியுடன் சதீஷ், யோகிபாபுவும் சேர்ந்து அடிக்கும் கொட்டம் சிரிக்கவைக்கிறது. ஜீவா ஜாலியாக நடித்திருக்கும் படமென்றாலும் அவரது வெற்றி பயணத்துக்கு இப்படம் கைகொடுக்கும் என நம்பலாம்.
ஷாலி பாண்டேக்கு பெரிதாக வேலை எதுவும் இல்லை. காட்சிகளில் சினிமாத்தனம் இல்லாமல் இருந்தால் பலம் அதிகரித்திருக்கும். நம்பிவரும் ரசிகர்களை இயக்குனர் டான் சாண்டி ஏமாற்றவில்லை.
ஒளிப்பதிவும். இசையும் படத்துக்கு கைகொடுத்திருக் கிறது.

கொரில்லா- நய்யாண்டியுடன் ஒரு மெசேஜ்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close