விமர்சனம்

கே 13 (பட விமர்சனம்)

படம் கே 13 

நடிப்பு: அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், காயத்ரி ஷங்கர், ஆதிக் ரவிச்சந்திரன், யோகி பாபு, மதுமிதா, விஜய் ராஜேந்தர், சாருலதா
தயாரிப்பு: எஸ்.பி.சங்கர், சாந்தபிரியா
இசை: சாம் சி.எஸ்.
ஒளிப்பதிவு: அரவிந்த் சிங்
இயக்கம்: பரத் நீலகண்டன்

இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசையில் 20 வருடமாக கோ டைரக்டராகவே பணியாற்றிய அருள்நிதிக்கு முதல் படம் கிடைத்து அது 10 நாளில் டிராப் ஆகிறது. விரக்தியிலிருக்கும் அவர் நண்பர்களுடன் பஃப் செல்கிறார். அங்கு எழுத்தாளர் ஷ்ரத்தாவை சந்திக்கிறார். இருவரும் நட்பாக பழகி நெருக்கமாகின்றனர். ஏற்கனவே மனஅழுத்தத்தில் இருக்கும் ஷ்ரத்தா திடீரென்று கொல்லப்படுகிறார். அந்த பழி தன் மீது விழுந்துவிடுமோ என்று நடுங்கும் அருள்நிதி அதிலிருந்து தப்பிக்க முயல்கிறார். போலீஸ் கண்காணிப்பு, அக்கம் பக்கத்து வீட்டாரின் பார்வைகளிலிருந்து மண்ணை தூவிட்டு அருள்நிதி எப்படி தப்பிக்கிறார் என்பதே கதை.

ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, ஒரு பஃப் என இரண்டு லொகேஷனை மட்டுமே பிரதானமாக வைத்து 2 மணி நேர படத்தை உயிர்ப்புடன் இயக்கியிருக்கிறார் இயக்குனர்.

அருள்நிதியின் திகில் நிறைந்த நடிப்பு, காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது. மயக்க நிலையிலிருக்கும்போது சேரில் தன்னை யாரோ கட்டி வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியாகும் அருள்நிதி தனக்கு பின்னாலேயே தனது தோழி ஷ்ரத்தா ரத்த வெள்ளத்தில் பிணமாக இருப்பதை கண்டு அதிரும்போது தொடங்கும் பரபரப்பு காட்சிக்கு காட்சி அதிகரித்துக்கொண்டே போகிறது. 
ஷ்ரத்தாவின் மரணத்துக்கு யார் காரணம் என்ற கேள்வியை எழுப்பி ரசிகர் களை குழப்பத்துக்குள் வைத்திருப்பது பலே டெக்னிக்.
ஷ்ரத்தாவின் வீட்டு கதவை போலீஸ் திறக்க முயலும்போது அந்த வீட்டிலிருந்து தப்பிக்க ஜன்னல் வழியாக அடுக்குமாடி குடியிருப்பின் சிலாப் மீது நின்று நடுங்கும் அருள்நிதி உதறலை ஏற்படுத்துகிறார்.
ஷ்ரத்தாவை சுற்றித்தான் கதை சுழல்கிறது. அவரோ பிணமாக பல காட்சிகளில் வெறுமனே அமர்ந்திருக்கிறார். ஆனாலும் அந்த வெறுமையை மற்ற காட்சிகளில் உணர்வுப் பூர்வ நடிப்பால் நிறைவு செய்கிறார். தன்னை அவர் எழுத்தாளர் என்று அவர் அறிமுகப்படுத்தும்போது இடம் பொருள் சூழல் அவரை எழுத்தாளராக ஏற்க மனம் தயக்கம் காட்டுகிறது.
மற்ற எல்லா பாத்திரங்களுமே மறந்துபோகும் அளவுக்கு அருள்நிதி, ஷ்ரத்தா மட்டுமே முழுபடத்தையும் ஆக்ரமித்திருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கில் சில படங்களில் அரிவாளால் ஆட்களை வெட்டி சாய்த்தாலும் வராத பயத்தை ஒரேயொரு கொலை காட்சியை காட்டி மிரள வைத்திருக்கிறார் இயக்குனர் பரத் நீலகண்டன்

.கே 13- த்ரில்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close