விமர்சனம்

கேம் ஓவர் (பட விமர்சனம்)

படம்: கேம் ஓவர்
நடிப்பு: டாப்ஸி, வினோதினி, அனிஷ் குருவில்லா, ரம்யா
தயாரிப்பு: ஒய் நாட் ஸ்டுடியோஸ்
இசை: ரான் ஈதன் யோகன்
ஒளிப்பதிவு வசந்த்
இயக்கம்: அஸ்வின் சரவணன்

பேய் படங்களுக்கு கோலிவுட்டில் நீண்ட ஆயுள் போல….! சில வருடங்களுக்கு முன் தொடங்கிய பேய் பட டிரெண்ட் இன்றளவும் தொடர்கிறது.

வீடியோ கேம் டிசைனர் டாப்ஸி தனது பெற்றோருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் கடற்கரை பகுதியில் உள்ள தனி பங்களாவில் வசிக்கிறார். அவருக்கு  வேலைக்காரியாக உதவுகிறார் வினோதினி. டாப்ஸிக்கு இருட்டை கண்டால் பயம். பயத்திலிருந்து விடுபட முயற்சிக்கும் அவர் தன் கையில் ஒரு டாட்டூ வரைந்துகொள்கிறார். பிறகுதான் அந்த டாட்டூ இறந்த பெண் ஒருவரின் அஸ்தியில் வரையப்பட்டது என்பது தெரிகிறது. அவரைப்பற்றி விசாரிக்கும்போது அப்பெண் சைக்கோ நபர்களால் கொலை செய்யப்பட்ட விஷயம் அறிந்து பரிதாபப் படுகிறார். இந்நிலை யில், 3 சைக்கோ கொலைகாரர்கள் டாப்சியை கொல்ல துரத்துகிறார்கள். இறந்த பெண்ணும்  டாப்சியின் கனவில் வருகிறார்? கொலைகாரர்களிடமிருந்து டாப்சி தப்பிக்கிறாரா என்பதற்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது.
மறந்தேபோச்சி ரொம்ப நாள் ஆச்சி … என்று பாடும் அளவுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார் டாப்ஸி. கோலிவுட் படங்களில் நடிப்பில் முழுமையாக தேறாம லிருந்தவர் பாலிவுட் சென்று திரும்பியபிறகு நடிப்பில் நடிப்பில் டிஸ்டிங்ஷன் வாங்கியிருக் கிறார்.

திகில் காட்சிகளில் டாப்ஸி காட்டும் மிரட்சியும், பின்னணி இசையும் சேர்ந்து ஆடியன்ஸை மிரள வைக்கிறது. சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி நடித்திருக்கும் காட்சிகளில் டாப்ஸியின் கடின உழைப்பு கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. சைக்கோ கொலைகாரர்கள் டாப்ஸியை கொல்ல சுற்றி வளைத்ததும் அவரை காப்பாற்றுவதற்காக வேலைக்காரி வினோதினி நடத்தும் போராட்டம் விறு விறுப்பை கூட்டுகிறது. ஒரு காட்சியில் வினோதினியின் தலைமட்டும் தனியாக ஜன்னலில் வந்து அடிக்கும்போது நெஞ்சு திக்கென்று அடித்துக்கொள்கிறது. உளவியல் நிபுணராக அனிஷ் குருவில்லா, டாட்டூ நிபுணராக ரம்யா கதை ஓட்டத்துக்கு துணை நிற்கிறார்கள்.
ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதையில் இவ்வளவு திகில், பரபரப்பு, சென்டிமென்ட் என எல்லா அம்சங்களையும் கலந்து தொய்வே இல்லாமல் காட்சிகளை தெறிக்கவிட்டிருக்கும் இயக்குனர் அஸ்வின் நேர்த்தியான இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார். அவருக்கு தோளோடு தோள்கொடுத்து அதிரடியாக பின்னணி இசை அமைத்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் இசை அமைப்பாளர் ரான் ஈதன் யோகன். 

‘கேம் ஓவர்’ ஆக்‌ஷன் த்ரில்லர்.


 

 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close