Fully Entertainment

கேப்மாரி (பட விமர்சனம்)

படம்: கேப்மாரி
நடிப்பு: ஜெய். வைபவி. அதுல்யா. சித்தார்த் விபின், சத்யன். தேவதர்ஷினி
இசை: சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு: ஜீவன்
இயக்குனர்: எஸ்.ஏ.சந்திரசேகர்
பத்திரிகை டி,விக்களில் வரும் தகவல்கள். செய்தி களை பார்க்கும்போது ஐடி ஆண், பெண் சிலரது நட்பு எந்தளவுக்கு செக்ஸ் அடிப்படையில் ஆகிவிட்டது என்று கற்பனை செய்யமுடியாத அளவுக்கு கீழ் இறங்கிவிட்டது. அப்படி ஒரு ஜோடி, வாழ்க்கையில் கணவன் மனைவியாக இணைந்த பிறகு திடீரென்று இன்னொரு இளம்பெண் கர்ப்பத்துடன் வந்து நின்று. என் கர்ப்பத்துக்கு காரணம் இவன்தான் என்று அந்த் பெண்ணின் கணவனை கைகாட்டினால் வீட்டில் என்ன ரணகளமெல்லாம் நடக்கும் நடக்கும் என்பதை இந்த காலத்து தலைமுறையிடம் நேரில் பார்த்துபோன்ற ஒரு அப்பட்டமான படைப்பை தந்திருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்..
இளசுகள் மது மயகத்தில் தவறு செய்தாலும் அந்த தவறு ஒருநாள் குடும்பத்தை எப்படியெல்லாம் ஆட்டிபடைக்கும் என்பதை ஒரு பாடமாக இளவட்டங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்கிறது கேமாரி.

மனைவியிருக்கும்போது இன்னொருத்திக்கு ரூட் போடுவனை கேப்மாரி என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது அதைதான் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் சற்று பலமாக. இளமை துள்ளளுடன் சொல்லியிருக்கிறார்,
ஐடியில் வேலை பார்க்கும் ஜெய் , வைபவி ரெயில் சந்திக்கின்றனர். மதுபோதையில் இருவரும் தவறு செய்கிறார்கள். பின்னர் ஒருமுறை சந்திக்கும் போது திருமணம் செய்துகொள்கின்றனர். அதன் பிறகு தன்னுடன் வேலைபார்க்கும் அதுல்யா வுக்கு உதவி செய்யப்போகும் ஜெய் மீண்டும் மதுபோதையில் அதே தவறை செய்கிறார். கர்ப்பமான அதுல்யா ஜெய் வீட்டுக்கே வந்து நிற்கிறார். அதன்பிறகு சக்களத்தி சண்டை தொடங்குகிறது. இருதலைக்கொள்ளி எறும்பாக சிக்கிக்கொள்கிறார் ஜெய். முடிவில் என்ன நடக்கிறது என்பது கிளைமாஸ்.
எங்கேயும் எப்போதும். ராஜாராணி முதல் கேப்மாரி வரை கதாநாயகிகளிடம் பம்மி பதுங்கி அவர்களை கைக்குள் போட்டுக்கொள்ளும் வித்தையைத்தான் செய்துகொண்டிருக்கிறார் ஜெய்,. ஆனால் அவருக்கும் சலிப்பு தட்டவில்லை பார்க்கும் ரசிகர்களுக்கும் சலிப்பு தட்டவில்லை. குட்டிகளை வளைத்துபோட இதுவொரு ஈசியான டெக்னிக்போல்தெரிகிறது.
ஒருபக்கம் வைபவி இன்னொரு பக்கம் அதுல்யா என்று சாய்ந்தாடம்மா சாய்ந்தடு என்று ரசத்தை பிழிந்தெடுத்திருக்கிறார்.ஜெய் அவர்களும் நசுக்கி எடுத்திருக்கிறார்கள்.
ஜெய்க்கு ரகசிய இடத்தில் மச்சம் இருக்குமொ என்னவோ சம்பளமும் வாங்கிக்கொண்டு வைபவி. அதுல்யா உதடுகளை இப்படி சுவைத்தெடுத்திருக்கிறார்.
கவர்ச்சி போட்டியில் அதுல்யாவை தூக்கி சாப்பிட்டுவிடுகிறார் வைபவி. என்ன இருந்தாலும் வெளிமாநிலத்து இறக்குமதியாச்சே.. வேகம் குறைஞ்சுபோகுமா என்ன? கவச்சியை எப்படி கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்களோ அதுபோல் நடிப்பிலும் இருவரும் போட்டி போட்டிருக்கி றார்கள்.
இதுஇன்றைய யூத் பசங்களுக்கான படம். கூட்டம் கூட்டமாக அமர்ந்து அரட்டை அடித்து, கமென்ட் வீசி பார்க்க சுண்டி இழுத்துவரும். ஒருகாலத்தில் சட்ட நுணுக்கங்களை அலசி ஆராய்ந்ததுபோல் தற்போது இளசுகளின் நாடித்துடிப்பை எடை போட்டுவைத்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். இது இவரது 70வது கடைசி படம் என்று குறிப்பிட்டிருந் தார். இருக்கும் இளமை வேகத்தை பார்த்தால் சென்சுரிபோடாமல் விட மாட்டார் போலிருக் கிறது. அதேபோல் ஜெய்க்கும் இது 25வது படம். மச்சம் இப்பத்தான் வேலை செய்யத்தொடங் கியிருக்கிறது. இன்னும் எவ்வளவோ கோல்போடு வார்.
சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் பின்னி பெடலெடுக்கிறது. தளபதி விஜய் சொன்ன வசனங்களை வைத்து ஜெய் பாடும் அந்த தத்துவ பாடல் தளபதி ரசிகர்களுக்கு தேர்தல் பாடலாக கிடைத்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஜீவன் அனுபவித்து காட்சிகளை படமாக்கி இருப்பது ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது.
‘கேப்மாரி’ இளசுகளின் கொண்டாட்டம்.